Tuesday, 13 January 2026

கலைகள் சார்ந்த பாடல்கள் மூலம் வாய்மொழி இலக்கியம்

 நாட்டுப்புறக் கலைகள் எண்ணற்றவை. அவைகளில் நிகழ் கலை ஒருவகை. பெரும்பாலும் ஆடல்பாடல் மரபுகளைக் கொண்டதாக அவை அமையும். இவைகளில் பாடப்படும் பாடல்கள் வாய்மொழி மரபாக வழங்கி வருகின்றன. அண்மைக்காலமாக ஆய்வாளர்கள் இவற்றைத் தொகுத்தும், ஆய்வு செய்தும் வருகின்றனர்.இப்பாடல்கள், சமயச் சார்புடைய நிகழ்வுகளின் போது, பாடி ஆடி நடிக்கப்பட்டு வருகின்றன. திறனாய்வு நோக்கில் கவிதை வகைகளில் ஒன்றாக இவற்றை நாம் அறிய வேண்டும்.

இப்பாடல்கள் தெருக்கூத்து போன்ற நாடக வகை சார்ந்தவை; வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, தேவராட்டம், சேவையாட்டம் போன்ற ஆட்டவகை,பாடல் வகை சார்ந்தவை. ஒயிலாட்டம் போன்ற வேறு நிகழ்கலை வடிவம் சார்ந்தவை எனப் பலவாறாக அமையும். இலக்கிய நோக்கில் இவை கவிதை. 

இவை இசைப் பாடல்களாக உள்ளன. பெரும்பாலும், சூழலுக்கு ஏற்பக் கதை தழுவிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும் இவை உள்ளன. பிற வாய்மொழிப் பாடல் கவிதை மரபிலிருந்து இவை முற்றிலுமாக மாறுபடுகின்றன. நீண்ட பாடலமைப்பு இசை, இலக்கியவகை, கூத்து/நிகழ் கலைமரபுக்கு ஏற்ப அமையும் மொழிப் பயன்பாடு, கதை தழுவிய அமைப்பு என்ற பன்முகத் தன்மைகளை இப்பாடல்களில் காணலாம்.

எழுத்திலக்கிய வகைகள் பலவற்றிற்கும், பிற்கால நாடக, ஆடல் மரபுப் பாடல்களுக்கும் இவை முன்மாதிரியாக உள்ளன. இந்த அடிப்படையில் திறனாய்வு நோக்கில் நாம் இவை பற்றி அறிய வேண்டும். 

கவிதை இலக்கிய வகை எவ்வாறு வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபிற்கு வளர்ச்சி பெற்றது என்பதை இதன் வழி நாம் அறிய முடியும். அத்துடன் இருவேறு கவிதை இலக்கிய வகைகளை ஒப்பிட்டு அவற்றின் தனித் தன்மைகளையும் உணர முடியும்.

கலைகள் சார்ந்த பாடல்களின் வகைகள் 

கலைசார்ந்த பாடல்கள், பல்வேறு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. எழுத்திலக்கியக் கவிதைகளை உள்ளடக்கம், உருவம், உத்தி என்ற அடிப்படை கனில் வகைப்படுத்துவது போல இவற்றை வகைப்படுத்த முடியாது. இவை மாறுபட்ட அடிப்படைகளைக் கொண்டது. இப்பாடல்கள் லக்கண மரபிற்குக் கட்டுப்படாதவை. எனவே. கூத்துப்பாடல், ஆட்டப்பாடல், தனி ஒருவர் நிகழ்த்தும் கலை, குழுவினர் நிகழ்த்தும் கலை என்றெல்லாம் நிகழ்முறைக் கேற்ப இப்பாடல்களைத் திறனாய்வாளர் வகைப்படுத்துகின்றனர்.

கூத்து, பழைமையான வடிவமாகும். தமிழின் நாடக வகைகள் அனைத்திற்கும் அது மூல வடிவம்.கூத்து மரபில் எண்ணற்ற பாடல் வகைகள் இடம் பெறுகின்றன. இவையாவும் இசைப்பாடல்கள். ஆடும் முறைக்கேற்ற, தாளச் சந்தங்களை உடையவை. எனவே, கூத்துப்பாடல்களை இந்த அடிப்படையிலே வகைப்படுத்த வேண்டும். சான்றாகத் தாளத்துடன் கூடிய தர்க்கம், தரு போன்ற பாடல்கள் ஒருவகை; தாளமின்றிப் பாடப்படும் விருத்தப்பாடல்கள் ஒருவகை, ஆனால் இரண்டும் இசைப்பாடல்கள்.

பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இசை நாடகங்கள் அனைத்திலும் தரு, தர்க்கம், விருத்தப்பாடல் வகைகளைக் காணலாம். இவை இசைப் பண்புகளோடு கூடிய கவிதை என்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பிட்ட சூழலில், கதை நிகழ்ச்சிக்கேற்ப, ஒரு கருத்தையோ, ஓர்உணர்வையோ மையமிட்டு இக்கவிதை அமையும்.

அதே நேரத்தில் நிகழ்கலையான கூத்திற்கேற்ப ஒருவரோ அல்லது இருவர் மாறிமாறியோ அல்லது பலர் குழுப்பாடலாகவோ பாடுமாறு வை அமையும். எனவே இக்கவிதையைத் திறனாய்வு செய்யும் ஒருவர் இவை அனைத்தையும் மனத்தில் கொள்ள வேண்டும். கவிதையின் உள்ளடக்கம், மொழி வெளிப்பாடு என்பவை இவைகளைக் கெண்டு கட்டமைக்கப்படும் அதேநேரத்தில் வாய்மொழி மரபிற்கேற்ற இலக்கணத்திற்குள் கட்டுப்படாத கவிதையாக அமையும். அதன் சொற்களே இதைக் காட்டும். வட்டாரத் தன்மையும், சாதிக் கிளை மொழியும், அதன் சொற்களில் வெளிப்படுவதை நன்கு உணரலாம்.

கலைகள் சார்ந்த பாடல்களின் பகுப்பு

கலை சார்ந்த பாடல்களைப் பல்வேறு வகைகளாகத் திறனாய்வாளர் பகுத்துள்ளனர்.இப்பாடல்கள் நிகழ்கலையில் பாடப்படுபவை. ஆட்டஞ் சார்ந்தவை, சமய நிகழ்வுகள் சார்ந்தவை என்று பல்வேறு தன்மையன. பாடப்படும் சூழல், கலையில் அதன்பயன்பாடு, பாடுவோர் என்ற அடிப்படை களில் இவை பகுக்கப்படுகின்றன. பாடல்களுக்கு இலக்கண மரபு இல்லாதது போல, பகுப்பிற்கும் திட்டவட்டமான வரையறை இல்லை. திறனாய்வாளர். தத்தம் தேவைக்கேற்ப, குறிப்பிட்ட சில அடிப்படைகளில், இப்பகுப்பைச் செய்துள்ளனர். பகுப்பிற்கான அடிப்படைகளைத் திறனாய்வுகளில் பதிவு செய்வர்.

மேலே நாம் குறிப்பிட்ட கூத்துப் பாடல்களில் இடம் பெறும் தரு ஒருவகை இசைப்பாடல் அதே நேரத்தில் கதை நிகழ்ச்சிக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் 1 அப்பாடல் வகை பயன்படுத்தப்படும். கூத்தில் பல்வேறு வகைகளாகத் தரு இடம் பெறும். ஒரு மாந்தர், கூத்தரங்கில் அறிமுகமாகும்போது பாடப்படுவது ஒருவகை (பிரவேசத்தரு -நுழைவுத் தரு) இரு மாந்தர்கள் உரையாடும்போது பாடப்படுவது ஒருவகை (உத்தர பிரதி உத்தரத் தரு). இருமாந்தர்கள் வாக்குவாதம் செய்யும்போது இடம் பெறுவதே தர்க்கத்தரு. இழப்பின் காரணமாக ஒருவர் புலம்புவது புலம்பல் தரு என்று பல்வேறு வகைகளாகத் தரு என்ற இசைப்பாடல் அமைகிறது.

பிற்காலத்தில் தமிழில் தோன்றிய இசை நாடகங்கள் யாவும் இந்தத் தருவகையை ஏற்றன. இசைப்பாடல்களில் ஒருவகையான கீர்த்தனை, இதிலிருந்து தோன்றியது. இசையோடு கூடிய கூத்துப்பாடல் வகை பல்வேறு வகைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதை இதனால் அறியலாம். சூழலுக்கேற்ற கூத்து நிகழ்வதற்கு ஏற்ப வ்வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திறனாய்வு நோக்கில் கவிதை வகை எவ்வாறு பெருகி வளர்ந்துள்ளது என்று அறிவதற்கு இது உதவும்.

Comments


EmoticonEmoticon