Wednesday, 31 December 2025

உடம்போடு மறைவது உயர்ந்த சமாதி| திருமூலர்

 பொதுவாக பெரிய பெரிய மகான்கள் மற்றும் சிலர்கள் நூல் எழுதுவதன் முக்கியமான காரணம் என்னவென்றால் மனித குலத்தின் துன்பம் போக்குவதற்காக ஆகும். இன்னும் சிலர்கள் கடும் தவம் செய்து தாங்கள் பெற்ற அறிவினை மக்களுக்கு திருமறை நூல்களின் வழியே அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் மக்களின் உடல் துன்பம் மற்றும் மனது துன்பம் பிறவி துன்பம் மற்றும் உயிர் துன்பம் உள்ளிட்ட அனைத்து வகையான துன்பங்களுக்கும் திருவு அளிப்பதற்காக இருக்கின்றன. 

தெய்வத் தமிழ் மொழியில் தன்னைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்துவதற்காக இறைவன் என்னை படைத்துள்ளான் இன்று திருமண தகவல் திருமந்திரம் எழுதிய நோக்கத்தை மேலும் தெளிவுபடுத்துகிறார். 

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் 

சொல்லிடின் 

உன் பற்றி என்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்ற தலைப்படிந் தானே


இவ்வுலகில் மனிதன் படைத்துள்ள இயந்திர மனிதன் ஆகிய ரோபோட் சுயமாகவே இயங்குகிறது. மனிதனாகிய நாமும் அது போல் சுயமாக தான் இயங்குகிறோம். இடையில் என்ன வேறுபாடு என்றால் ரோபோட் என்பது ஒவ்வொரு செயலையும் உணர்ச்சி இல்லாமல் செய்து வருகிறது. அதுபோல் மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு செயலையும் உணர்ச்சியோடு செய்கிறோம். 

அந்த உணர்ச்சிக்கு பெயர் உயிராகும். அந்த உணர்ச்சியை வாரி வழங்கும் ஆற்றல் தான் இறையாற்றல்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்னவென்றால் வான் காந்தம் எனப்படும் வானளாவிய ஆற்றல் தான் இறையாற்றல் என்கிறார். ஜீவகாந்தம் எனப்படும் உடலளவில் கட்டுப்பட்ட ஆற்றல் தான் உயிரற்றல் ஆகும். 

விஜயகாந்த் குறைய குறைய வான் காந்தம் எனப்படும் இறையாற்றிலிருந்து உயிரற்ற இறக்கி வேண்டும் நாம் நிரப்பி கொள்ளலாம். உதாரணத்திற்கு பேட்டரியில் சார்ஜ் குறைந்த உடன் நாம் மறுபடியும் சார்ஜ் செய்து கொள்வது போல். அவ்வாறு நாம் ஆற்றலை நிரப்பாமல் விடுவதால் இருந்த ஆற்றல் தவறான வழிகளில் விரைவில் விரையம் ஆகி விடுவதாலும் வருவதே நமக்கு பலவீனமாகும். அந்த பலவீனத்தால் வருவது தான் நோய்கள். 


ஜீவகாந்தம் என்னும் உயிர் ஆற்றலை வான் காந்தம் எனப்படும் இறையாற்றிலிருந்து இரண்டு முறைகள் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம். 

முதல் ஒன்று உணவின் வழி 

இரண்டாவது ஒன்று தவத்தின் வழி 

இந்த உணவின் வழியே ஆற்றலை இறக்குவது என்பது பழைய முறையாக உள்ளது. இந்த வழியானது விலங்குகள் பயன்படுத்தக்கூடிய முறையாகும். இரண்டாவதாக உள்ள தவத்தின் வெளியானது எதுவும் தெரியாத நபர்கள் கூட பயன்படுத்தக்கூடிய முறையாகும். இந்த முறையின் மூலம் உணவின் துணை இன்றி நேரடியாக நாம் ஆற்றலை இறக்கி பயன்படுத்தக்கூடிய நவீன முறையாகும். இந்த முறையானது மகான்கள் கற்றுக் கொடுக்கும் முறையாகும். 

நாம் உணவின் வழியே ஆற்றலை பெருக்குவதோ பல பிறவிகளின் வழியே பெற்றுள்ள பொது அறிவு. மற்றொன்று தவத்தின் வழியே ஆற்றலை பெருக்குவது மனித பிறப்பின் வழியே பெற வேண்டிய ஒரு முக்கியமான அறிவு. 

உணவின் வழியே நாம் பெரும் உயிராற்றுளானது வெப்பத்தை அசுத்த வைப்போம் என்று வள்ளல் பெருமாள் கூறுவார். ஏனென்றால் நிலமாக தின்ற உணவு அனைத்தும் வெப்பத்தை உற்பத்தி செய்துவிட்டு மனமாக வெளியேறி நாற்றம் உண்டாக்குகிறது. விறகு எரித்து வெப்பம் உண்டாக்கி புகையை கறியை கழிவாக வெளியேற்றுவது போன்ற ஆகும். 

மற்றொன்று தவத்தின் வழியே பெறக்கூடிய உயிரோட்டலானது வெப்பம் சுத்த வெப்பம். ஏனென்றால் ஆற்றல் உற்பத்தியாகும் தவிர அசுத்தம் ஏதும் கழுவாக வெளியேறி நாற்றம் வராது. மேலும் கேஸ் எரிந்து வெப்பம் உண்டாகும் போது புகை ஓக்கறியோ வெளியேறாமல் இருப்பது உங்களுக்கு தெரியும் அது போன்ற முறைதான் இது. 

தவத்தின் வழியே அந்த தூய வெப்பத்தை உற்பத்தி செய்து தூய இயங்கும் பெரும் முறையை திருமூலர் பெருந்தகை என்பதில் நன்றாக விளக்கி உள்ளார். 

அவர் நான் பெற்ற அந்த இன்பத்தை மனிதகுலம் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைத்தார். வானளாவிய நிற்கும் ரகசியமாகிய சிவ ரகசியத்தை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். எனவே அந்த ரகசியத்தை உணர்ந்து உடலுக்குள் இறை உணர்வை உண்டாக்கும் மந்திர விதையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். 

இதுபோன்று நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் தொடக்கத்தில் விட்டு விட்டு வரும் மின்சார மெய்யுணர்வு போல் முடிவில் இடைவெளி இன்றி தொடர்ந்து பாய்ந்து நம்மை இன்பமயம் ஆக்கும். என்பதுதான் இந்த திருமந்திரத்தின் வழியே அவர் உணர்த்தக்கூடிய ஒரு ரகசியமாக இருக்கிறது.

வானுக்குள் ஈசனை தேடும் அருளர்காள்

தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ

தேனுக்குள் இன்பம் சிறந்திருந் தாற்போல் 

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே 

என்கிறார் திருமூலர் மற்றொரு பாடலில்....


மக்களாகிய நாம் தேனுக்குள் இருக்கும் இனிப்பை தேனுக்கு வெளியே தேடும் அறியாமையோடு இருக்கிறோம் உனக்குள்ளேயே உணர்வாக ஒளிந்திருக்கும் இறை இன்பத்தை வானுக்குள் வெளியே தேடி வீணாக வேண்டாம் என்பதுதான் இந்த பொருள். 

பொதுவாக மனிதர்களுக்கு மூன்று வகைகளில் மரணம் ஏற்படும்....

1. முதலாவதாக விபத்துக்களால் ஏற்படும் திடீர் மரணம் மற்றும் கொலை தற்கொலை போன்றவையும் இதில் அடங்கும். 

2. இரண்டாவதாக சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு மாரடைப்பு என்பன போல் ஏதோ ஒரு நோய் தோன்றி மருந்து மற்றும் மருத்துவர் கையால் ஏற்படக்கூடிய மரணம். 

3. மூன்றாவதாக அனைவரும் அதிக வயதாகி உடல் செயல்திறன் இயர்ந்து கொண்டே வந்து என்பது அல்லது 90 அல்லது 100 வயதில் ஏற்படக்கூடிய இயற்கை மரணம். 

மேலே உள்ள மூன்று மரணங்களில் விபத்தால் ஏற்படக்கூடிய முதல் வகை மரணம் மிகவும் மோசமானது. முன்னொருத்தம் தீவினையாலும் நம்முடைய முன்வினையாலும் நிகழக்கூடிய மரணம் ஆகும். 

இரண்டாவதாக நோயால் ஏற்படக்கூடிய மரணமானது சற்று பரவாயில்லை. அப்படி இருந்தாலும் கூட இதுவும் நிம்மதியான மரணம் இல்லை. தவறான உணவு பழக்கத்தாலும் பிற பழக்கங்களாலும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு தம்முடைய செயல் தன்மை இழந்து நோய்கள் உண்டாகி மரணம் அடைவது. 

எனவே மூன்றாவதாக கூறப்பட்டுள்ள இயற்கை மரணம் ஆனது உயர்ந்த மரணம் ஆகும். 

தவம் செய்பவர்களுக்கும் இதுபோல் மூன்று வகை சமாதி நிலை இருக்கும். 

முதலாவதாக உயிரை உள்ளடக்கி உடலை செயலற்றதாக்கும் ஜீவ சமாதி முதல் வகையாகும். 

உயிரை உள்ளடக்குவதோடு உடலையும் மண்ணுக்குள் புதைக்காமலேயே வெளியே வைத்திருந்து அடையும் தியாக சமாதி இரண்டாவது முறையாக இருக்கிறது. 

உயிரையும் உடலையும் பிரபஞ்சமயமாக்கி மறைத்துக் கொள்ளும் ஞான சமாதி முறைதான் மூன்றாவது முறையாகும். 


உடன் மறையும் உயர்ந்த சமாதி நிலையே திருமூலர் அவர்கள் தம் திருமறையில் மிகத் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் 

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து 

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்....


மனிதர்களாகிய நாம் குழந்தை பருவத்தில் முகம் மிகவும் பார்ப்பதற்கு கலையாகவும் அழகாகவும் இருக்கும். அந்த குழந்தை பருவத்தில் தான் நாம் பல்வேறு வகையான மாடியில் ஏறுதல் மரம் ஏறுதல் மற்றும் பல்வேறு வகையான வேலைகளை மிகவும் சுறுசுறுப்பாக செய்வோம். நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க முகத்தில் சுருக்கம் ஏற்படுதல் சோகமான தோற்றம் இன்னும் சிலருக்கு மிகவும் கொடூரமான தோற்றம் மூட்டு வலி முதுகு வலி கை வலி கால் வலி மற்றும் உடல் வலிமை ஏற்ற நிலை போன்ற பல்வேறு வகை வியாதிகள் ஏற்படுகிறது. 

இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? உடல் வளர்ந்ததே தவிர அதற்கு இணையாக உயிர் வளரவில்லை. நாம் உணவால் உடலை வளர்க்கிறோம் தவிர தவத்தால் உயிரை வளர்க்க தவறிவிடுகிறோம். 

உயிராற்றல் நமக்கு குறைய குறைய உடல் உறுப்புகள் பலவீனமடைந்து நோய்கள் தோன்றி நம்மை தாக்குகின்றன. எனவே நோய்களை எதிர்ப்பதில் உயிராற்றல் மேலும் அதிகமாக செலவாகி முடிவில் முழு பற்றாக்குறை ஏற்பட்டு உடலானது செயல் இழந்து போகிறது. 


உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் 

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் 

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று 

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே....

தொடக்க காலத்தில் உடம்பை சளி தீர்வு மலம் சிறுநீர் உற்பத்தியாகும். இதையெல்லாம் நாம் அழுக்கு என்று கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் தவநிலையில் தொடர்ந்து சென்ற போது உடம்புக்குள்ளே சுயம் பிரகாசமான ஜோடி வடிவமாய் திரியும் மெய்பொருளான இறைவனைக் கண்டேன்.

எனவே நம் உடலானது உத்தமன் கோயில் கொண்டுள்ள திருக்கோவிலாக உடலானது இருக்கிறது. எனவே நாம் நம்முடைய உடம்பினை தூய்மையாக பேணி பாதுகாக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். 

உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம் 

வள்ளல் பிரானுக்கு வாய் கோ புறவசல் 

தெள்ளத் தெரிந்தவர்க்கு ஜீவன் சிவலிங்கம் 

கள்ளப் பலன் ஐந்தும் காளா மணிவிளக்கே 


இப்பாடலில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது நம்முடைய உள்ளமே திருக்கோயிலின் கருவறை ஆகும். நம்முடைய உடலானது கோயிலின் ஆலையமாகும். நம்முடைய வாயானது ஆலயத்தின் கோபுர வாசலாகும். சிவனே சிவலிங்கமாகும். புலன்கள் ஐந்தும் சிவ பூஜை வேளையில் ஒலிக்கக்கூடிய மணியோசை கற்பூர ஒளியுமாம். என்பதுதான் இந்த பாடல் உடைய பொருளாகும். 

இந்தப் பாடலின் மூலமாக திருமூலரானவர் நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்று தெரியுமா? 

நம்முடைய உடம்பை நாம் பேணி பாதுகாக்க வேண்டும். திருக்கோவிலுள் யாராவது செத்த பிணத்தை கொண்டு செல்வார்களா? எனவே கோபுர வாசலாகிய வாய்க்குள் உணவு சாப்பிடும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் செத்த பிணம் ஆகிய இறைச்சிகளை உணவாக உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறுகிறார். 

உடல் நலமுடன் அழகுடன் இளமையுடன் இருக்கும் போது தவ முயற்சிகளை தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். நம்முடைய உடம்பினுள் ஒத்தமனை காணுங்கள் உடம்பையும் உயிரையும் ஒருசேர வளர்த்து உடம்புடன் மறையும் உயர் சமாதி நிலையை அடைய வேண்டும் என்று கூறுகிறார். 

எனவே நாம் சாப்பிடும் உணவு முறையில் சில ஒழுங்குகளை கடைபிடிப்போம் உணவால் உடம்பை வளர்க்கும் அதே வேளையில் தவத்தாலும் உயிரையும் வளர்க்கக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Comments


EmoticonEmoticon