அறிவியல் கண்டுபிடிப்பு ஏதேனும் உலகில் ஒரு நாட்டில் தோன்றினால், அது நம் இந்தியத் திருநாட்டிற்கு அறிமுகமாகச் சில ஆண்டுகள் ஆவது வழக்கம். ஆனால், இந்தத் திரைப்படம் மட்டும் உலகில் அரங்கேறி ஏழாவது மாதத்திலேயே நம் இந்திய நாட்டிற்கு அறிமுகமானது.
இந்தியாவில் மௌனத் திரைப்படம் வந்ததையும், நம் இந்திய அறிஞர்கள் நாமே திரைப்படம் காட்டவும் தயாரித்து அளிக்கவும் தொடங்கிய வரலாற்றையும் இந்தப் பகுதி சுருக்கமாக விளக்குகிறது.
இந்தியாவில் லூமியர் சகோதரர்கள்
பிரான்சு நாட்டினரான லூயிஸ் லூமியர், அகஸ்டி லூமியர் என்னும் லூமியர் சகோதரர்கள், பாரீஸ் மாநகரில் 1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் நாள், பிரெஞ்சு தேசத்து மக்கள் முன் திரைப்படம் காட்டினர் என்பதை முன்னர்க் கண்டோம். அந்த நாளிலிருந்து சரியாக ஆறு மாதங்களும் பத்து நாட்களும் கழித்து, அதேலூமியர் சகோதரர்கள் இந்தியாவுக்கு வந்து தங்கள் திரைப்படங்களைப் போட்டுக்காட்டினர்.
1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி, இந்நாளில் 'மும்பை" என்றழைக்கப்படும் பம்பாய் நகரில், 'வாட்சன் ஹோட்டல்' என்ற உணவு விடுதியின் பெரிய ஹாலில் தங்களின் ஒரு ரயியின் வருகை' முதலான குறும்படங்களை இந்திய மக்களுக்குத் திரையிட்டுக் காட்டினர். 'திரைப்படக் கண்காட்சிகள்' (Cinematographic Exhibitions) என்ற பெயரில்தான் அந்த நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் அதுவே திரையரங்கு நிகழ்ச்சியாக மாறியது.
'தி டைம்' (The Time) என்ற இந்திய ஆங்கில இதழ் அந்தக் கண்காட்சி தொடங்கிய நேரத்தில், "நாட்டின் அதிசயம்! உலகப் பேரதிசயம்!" (The marvel of the country. the wonder of the world) என்று பாராட்டி எழுதியது அந்தச் சின்னச் சின்ன ஒரு நிமிடப் படங்களைவைத்தே ஒருநாளைக்கு நான்கு காட்சிகள் வீதம் இரண்டு மாதங்களுக்கு மேல் அந்தத் திரைப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்றைய இந்திய வெள்ளை அரசின் தலைநகரமாக விளங்கிய கல்கத்தாவில், லூமியர் சகோதரர்களைப் போலவே ஒரு பிரிட்டிஷ் வெள்ளைக்காரர் அதே போன்ற திரைப்படக் கண்காட்சியை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நம் நாட்டிலும் திரைப்படம் காட்டிப் பணம் பெருக்க வேண்டும், சினிமா தயாரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் துடிப்பும் நம்மவர்களுக்கு ஏற்பட்டது.
சாமிக்கண்ணு வின்சென்ட்
1896ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் பம்பாயில் காட்டிய துண்டுத் திரைப் படங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாட்டிலிருந்து அதே ஆண்டின் இறுதியில், டுபாண்ட் என்பவர் ஏகநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு கதை கூறும் திரைப்படத்தைக் கொண்டுவந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் 'ஏசுவின் வாழ்க்கை' என்பதாகும். அது மௌனப்படமே. அதுதான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் ஆகும். ஏசுவின் கதை எல்லோர்க்கும் தெரிந்த கதை என்பதால், அது ஊமைப்படமாக இருந்தபோதும், அதற்கு இந்திய மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல இடங்களிலும் டுபாண்ட் என்பவர் அதனைத் திரையிட்டுக் காட்டி நான்கு ஆண்டுக காலம் பெரிய அளவில் பொருளீட்டினார்.
தமிழ்நாட்டிற்கும் டுபாண்ட் வந்தார். தமிழ்நாட்டில் திருச்சி நகரில் அவர் ஏசுவின் வாழ்க்கை என்ற அந்தப் படத்தைத் திரையிட்ட நேரம், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவர் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அப்போது, அந்தப் படத்தை வியந்து பார்த்து அதன்பால் வெறியோடு ஈர்க்கப் பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார்.
அவர் திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சலனப் படம் அவர் மனத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் ஒரு தூய கிறித்தவர் ஆதலால், தேவ ஆவியால் நிரப்பப்பட்ட அற்புதக் குழந்தை ஏசுநாதரின் வாழ்க்கையைக் கூறும் அந்தத் திரைப்படம் அவரை வெகுவாக ஈர்த்தது. டுபாண்ட் திடீர் உடலக்குறைவால் திரைப்பட நிறுவனங்களில் படம்பிடிப்பது தொடர்பான துணுக்கங்களைக் கற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினார்.
அதன் விளைவாகத் தமிழ்நாட்டின் முதல் மெளனத் திரைப்படம் 'கீசக வதம்' 1917ஆம் ஆண்டில் வெளிவந்தது கீசக வதம் 35,000 ரூபாய் செலவில் தயாரிக்கப் பட்டது. படத்தின் நீளம் 6,000 அடிகள் கதாநாயகளாக ராஜி முதலியார் நடித்தார் அத்திரைப்படம் பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது அதனைத் தொடர்ந்து ஆறு மௌனப் படங்களை நடராஜ முதலியார் தயாரித்து வெளியிட்டார். அவற்றுள் திரெளபதி வஸ்திராபகரணம் (1919), லவகுசா (1920), மார்க்கண்டேயா (1922), மயில் ராவணா (1923) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
தமிழ்நாட்டில் மௌனப் படங்கள்
1923ஆம் ஆண்டில் நடராஜ முதலியார் திரைப்படத் தொழிலைக் கைகழுவினார். காரணம், அரசின் ஆதரவு திரைத்தொழிலுக்கு இல்லாதது ஆகும். சுதந்திரப் போராட்டம் மெல்ல மெல்ல உச்சத்தை அடைந்துவரும் சூழலில், இந்தியர்கள் பலர் சினிமாத் தொழிலில் இறங்கியது வெள்ளையர் அரசுக்குப் பிடிக்கவில்லை. 1918இல் 'இந்திய சினிமாட்டோகிராப் சட்டம்' என்ற பெயரில் ஆங்கில அரசு திரைத்தொழிலை நசுக்கத் தொடங்கியது.
1920ஆம் ஆண்டில் பம்பாய், கல்கத்தா, சென்னை, ரங்கூன் ஆகிய நகரங்களில் சென்சார் போர்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அத்தகைய எதிர்ப்புகளிலும் நம்மவர்கள் படத் தயாரிப்பில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் தாதா சாகிப் பால்கே மட்டுமே 100 மௌனப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தென்னிந்தியாவில் மௌனப் படக்காலத்தில், அதாவது 1917 முதலாக 1931 வரையிலும் கதைகூறும் மெளனத் திரைப்படங்கள் 108 தயாரிக்கப்பட்டன.
அவற்றுள் பெரும்பாலானவை புராணக் கதைகளாகவே இருந்தன. நல்லதங்காள். நந்தனார். கோவலன் போன்ற நாட்டுப்புற வரலாறு தழுவிய கதைகளும் திரைப்படங்களாயின வசனமோ பாடலோ இல்லாமையால், ஊமைப் படக்காலத்தில் பிரபலமான ஹீரோக்கள் பாட்லிங் மணி, ஸ்டண்ட் ராஜூ முதலான சண்டைப் பயிற்சி பெற்றவர்களே கோலோச்சினர்.
திரையரங்குகளில் மௌனப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இடையே படத்தை நிறுத்தி, வெள்ளைத் திரைக்கு முன் அமைந்த மேடையில் மல்யுத்தம் போன்ற ஸ்டண்ட் காட்சிகள், நடனங்கள் முதலியவற்றை நடத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. சண்டைக் காட்சிகள், சாகசக் காட்சிகள், வயிற்று நடனம் (Belly Dance), முத்தமிடுதல் போன்றவை அன்றைய மௌனப் படங்களில் மிகுந்து இடம்பெற்றன.
கேமரா லென்ஸ் முன்னால் நின்றால் அழகும் உடலநலமும் கெட்டுவிடும் என்ற மூடநம்பிக்கையால் ஆரம்பத்தில் பெண்கள் நடிக்க முன்காவில்லை. எனினும், அந்த நிலையை ஆங்கிலோ இந்தியப் பெண்கள் முன்வந்து மாற்றினர். 1919இல் நடராஜ முதலியார் தயாரித்து வெளியிட்ட 'திரௌபதி வஸ்திராபஹரணம்' படத்தில் துகிலுரியப்பட்ட திரெளபதி ஓர் ஐரோப்பிய நடிகை ஆவார். தமிழ்ப் பெண் ஒருவரி திரைப்படத்தில் நடிக்க முன்வந்தார். அவர்தான் தஞ்சை டி.பி.ராஜலட்சுமி நாடக நடிகையாக இருந்த அவர் 1929இல் வெளியான' கோவலன்' என்ற ஊமைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்தார். அதன்பின் 1931இல் 'உஷாசுந்தரி', 'ராஜேஸ்வரி' ஆகிய மௌனப் படங்களில் நடித்தார்.
மேற்கத்திய சினிமாவின் தாக்கமும் அன்றைய மௌனப் படங்களில் இருந்தன மௌனப்படக் காலத்து முக்கிய சினிமாப் பிரமுகர்கள் எ.நாராயணன், ஆர்.பிரகாஷ் ஆகிய இருவரும் மேலைநாட்டு மோகமுடையவர்களாக இருந்தனர். படத்தின் தலைப்பு கூட அப்போது இறக்குமதியாகிக் கொண்டிருந்த அமெரிக்கப் படங்களின் தலைப்புக் களைப் போல இரண்டு பெயர்களுடன் சூட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, 'மயில் ராவணன் அல்லது மைத்ரேயி விஜயம்', 'மார்க்கண்டேயா அல்லது சிவலியா என்பனவற்றைக் கூறலாம்.
மௌனப்படக் காலக் கதைசொல்லிகள் :
யாமைப்படக் காலத்தில் 'கதைசொல்லிகள்' என்னும் ஒருவகைக் கலைஞர்கள் உருவாயினர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இருட்டில் திரையோரமாக நின்றவாறே 'மைக்ரோஃபோன்' எனப்படும் ஒலிப்பெருக்கிக் குழாய் மூலமாக உரத்த குரலில் காட்சிச் சூழலை வருணித்தும், தேவையான இடங்களில் சுவையான வசனத்தையும் பேசிக்கதை கூறுபவர்களே இந்தக் கதைசொல்லிகள்.
அக்காலத்தின் சூப்பர் ஸ்டார்களாக அவர்களில் சிலர் விளங்கினர். 'எங்கள் திரையரங்கில் இன்னவர் கதைசொல்வார்' என்று விளம்பரப்படுத்தும் அளவிற்குச் சிலர் புகழ்பெற்றிருந்தனர். அவர்கள் படத்தின்காட்சியை வருணிப்பதும் வசனம் பேசுவதும் மிகவும் சுவையாக இருக்கும். இத்தகைய கலைஞர்கள் பேசும்படம் வந்த பிறகு மறைந்து போயினர்.
0 Comments