Monday, 12 January 2026

புனைகதை இலக்கியம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

புனைகதை உரைநடையில் எழுதப்படும் படைப்பிலக்கிய வகையாகும். ஒருககுந்தைக் கூறுவதற்குப் புனையப்பட்ட கதை அது. புனைதல் என்ற சொல்லே அது படைப்பாளனால் ஆக்கப்பட்ட கதை; உண்மையானதன்று என்பதைக் காட்டும்.

 படைப்பாளன் தான் கண்ட, கேட்ட வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனையும் சேர்த்துப் புனைவது புனைகதை. உரைநடை புழக்கத்திற்கு வந்த பின் உலக மொழிகள் அனைத்திலும் இந்த இலக்கிய வகை உருவானது. ஐரோப்பியர் உறவால் நம் நாட்டிலும் இவ்வகை பரவியது.

உரைநடை வருவதற்கு முன்னே வாய்மொழி இலக்கியக் காலத்திலிருந்து கதை நம்மிடையே உண்டு. ஆனால் வடிவச் செம்மையுடன், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துடன் உலகப் பொதுவான புனைகதை வகையாக அது இல்லை. எனவே உரைநடைப் பண்பும், அச்சின் மூலம் மக்களனைவருக்கும் உடனடியாகச் செல்லும் தன்மையும் கொண்டதாகப் புனைகதை அமைந்தது.

தொழிற்புரட்சி, ஜனநாயக வாழ்க்கை நிலை, நகர வாழ்க்கை, புதிய ஐரோப்பிய முறைக்கல்வி, பத்திரிகைகளின் வரவு என்ற பல்வேறு காரணங்கள் ஒன்றுசேரப் புனைகதை இலக்கிய வகைகள் பெருகின. இந்தப் பின்னணியோடுதான் புனைகதையை நாம் அணுக வேண்டும்.

ஒரு கருத்தைக் கதையின் மூலம் வெளிப்படுத்துவது புனைகதை என்று பார்த்தோம். சிறுகதை, நாவல், குறுநாவல் என்று அது வகைப்படும். உலக மொழிகள் அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டு அளவில் புனைகதை தோன்றியது. 

தமிழில் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் முதலில் தோன்றிய நாவலாகும். மகாகவி பாரதியார் சிறுகதையைத் தோற்றுவித்தார். அன்றைய காலச் சூழலில் பத்திரிகைகளின் பெருக்கமும், அச்சு வசதியும் புதிதாக உருவான ஆங்கிலக் கல்வி கற்ற வாசகர்கூட்டமும் புனைகதை இலக்கியப் பரவலுக்குப் பெரிதும் துணை நின்றன.

புனைகதை இலக்கியத்தில் பொதுப்பண்பு

வாழ்க்கையை புனைகதை, நவீன இலக்கியம் என்று கூறப்படுகிறது. அச்சொல்லே பழைய கால இலக்கியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, நவீன வெளிப்படுத்தும் லக்கியம் என்பதைக் காட்டுகிறது. நடப்பியல் நெறியைக் கொண்டது இவ்வகை இலக்கியம். 

அது அனைவருக்கும் புரியும்படியான எளிமையான நடை யில் அமைந்திருக்கும். 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படியாக எளிய நடையில் இருக்க வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

இதற்கு முன்பு, கவிதையில் மட்டுமே இருந்த இலக்கியம் ஒரு சில கற்றவர்களுக்கே உரியதாக இருந்தது. புனைகதை இலக்கியம் அதை மாற்றி அனைவருக்கும் உரியதாக அமைந்தது. புனைகதை இலக்கியத்தின் நவீன இலக்கியம் எழுதியவுடன் அச்சிடப்பட்டு அனைவருக்கும் சென்று சேருகிறது. எனவே, படிக்கும் வாசகனுக்குரிய நுகர்பொருளாக அது மாறுகிறது. எனவே வாசகனுக்குக் கதை சொல்லும் இலக்கிய மரபுகளோடு அது உற்பத்தி கூறுவதையும் செய்யப்படுகிறது. பொழுது போக்கையும் கருத்துக் அடிப்படையாகக் கொண்டு புனைகதை அமைகிறது. புனைகதையைப் படிக்கும் வாசகனின் அறிவு மட்டம் இதனால் கூடுகிறது. புனைகதை இலக்கியம் கருத்தின் மூலம் மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பழைய கால இலக்கியங்களைப் போல் அல்லாமல், அரசு, சமூகம், குடும்பம், சமயம், நீதி ஆகிய அனைத்து நிறுவன அமைப்புக்களையும் அவற்றின் தன்மைக்கேற்ப விமர்ச்சிக்கும் பணியைப் புனை கதை செய்கிறது. எனவே, அதைப் படிக்கும் வாசகனும் நன்மையைப் பாராட்டவும் தீமையை எதிர்க்கவும் கூடிய ஆளுமையைப் பெறுகிறான்.


புனைகதை இலக்கியம் இந்த வகையில் சமூக மாற்றத்தை உருவாக்குகிறது. அதன் வடிவம் உள்ளடக்கம், உத்தி என்பவை பழைய மரபுகளிலிருந்து பெற்றதாகவும், புதிதாகப் படைத்துக் கொண்டவையாகவும் அமைகின்றன. ஒரே நேரத்தில் உலக இலக்கியப் பண்புகளையும், நம் மரபின் தொடர்ச்சியையும் கொண்ட பொதுமக்கள் இலக்கியமாகப் புனைகதை அமைகிறது.

புனைகதை இலக்கியத்தின் வகை

குறுநாவல் என்று புனைகதைகள் அடிப்படையில் சிறுகதை, நாவல், வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனக்குள் பல்வேறு வகைகளை உடையது. அடிப்படையில் இவை மூன்றும் தனித்தனி வகைகள்.

சிறுகதை:

ஒரு கருத்து அல்லது ஓர் உணர்ச்சி, ஒரு மாத்தரின் பண்புநலன் என்ற ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு அமைவது சிறுகதை. அது செறிவான வடிவச் செம்மை உடையது. சிறுகதையின் வழியே ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதை மிகச் சரியாகப் படிப்பவர் உணருமாறு சிறுகதை படைக்கப்படும். இதற்கு மொழி உள்ளிட்ட அனைத்து வெளியீட்டுத் திறன்களும் உதவும். நல்ல தரமான கதை, பொழுது போக்கிற்கும், சுவை ஊட்டுவதற்கும் வேண்டிப் படைக்கப்படும் கதைகள், வணிக நோக்கிலான கதைகள் என்று சிறுகதை பல்வேறு வகைகளில் அமையும்.

நாவல்:

நாவல் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுவது.கருத்தை விளக்குமாறு நிகழ்ச்சிகளால் ஆன கதைப்பின்னல் அதில் இருக்கும். பெரும்பாலும் ஒன்றுக்கொன்று காரண காரியத் தொடர்புப்படி நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். கதை மாந்தர்கள், காலம், இடம், வாழ்க்கை முறை என்பவை நாவலில் விரிவாக இடம் பெறும்.

சிறுகதையைப் போல அல்லாமல் நாவல் படிப்பவருக்கு ஒரு முழுமையான அனுபவத்தைக் கொடுக்கும் நாவலும் தன்னளவில் செறிவான வடிவத்தைக் கொண்டு அமையும். பல சிறுகதைகள் ஒன்றிணைந்தது நாவல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்த லக்கிய ய வகைகள். நாவல் பத்திரிகைகளில் தொடர்கதையாக வந்து பின்னர் முழுமையாக வெளியிடப்படும். இவ்வாறு வரும்போது படிப்பவர்சுவைக்கேற்ப அதன் வடிவச் செம்மை நெகிழ்ச்சி அடையும். இதற்கு மாறாகப் பல நாவல்கள் நேரடியாக நூலாக வருகின்றன.

குறுநாவல்:

சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட இலக்கிய வகையாகக் குறுநாவல் அமைகிறது. ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு குறுநாவல் படைக்கப்படுகிறது. ஒரு சில நிகழ்ச்சிகள் மூலம் ஒரு குறிப்பிட்ட கால, டப்பின்னணியில் மனித வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் குறுக்கு வெட்டாகப் படைப்பது குறுநாவலாகும்.

படிக்கும் ஒருவருக்கு ஒரு முழுமையான வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் ஒரு சுண நேர உணர்வின் வெளிப்பாடும் அல்லாமல் சிறிது நீண்ட அனுபவத்தைக் கூறும் இலக்கிய வகை குறுநாவலாகும். ஓரங்க நாடகம் போல இதன் வடிவச் செம்மை இருக்கும். புனைகதை இவ்வாறு மூன்று வகையான தனித்தனிப் படைப்புகளாக உள்ளன.

Comments


EmoticonEmoticon