இலக்கிய மரபில், வாய்மொழி இலக்கியமே முதன் முதலாகத் தோன்றியது.உலக மொழிகள் அனைத்திலும் வாய்மொழி மரபு மிகத் தொன்மையானது. எழுத்திலக்கியத்திற்கு முந்தியதான வாய்மொழி இலக்கிய வகைகள், அதற்கான அடிப்படைகள் குறித்து இந்தப் பாடத்தில் அறிய உள்ளோம்.
வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் உள்ளடக்கம், உருவம், உத்தி சார்ந்த மரபுகளைப் எந்த அளவிற்கு எடுத்துப் பின்னர் எழுத்திலக்கியப் படைப்பாளர்கள் பயன்படுத்தினர் என்று அறிவது திறனாய்வின் தேவையாகும். அதற்காகவே வாய்மொழி இலக்கியம் குறித்துக் கற்கிறோம்.
வாய்மொழி இலக்கியம் - பாடல்கள்
வாய்மொழி இலக்கியத்தில் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வாய்மொழி 95 படைப்பாளரால் உருவாக்கப்படாதது. இலக்கியம், குறிப்பிட்ட காலங்காலமாக மக்களிடையே வாய்மொழி மரபாகப் பாடப்பட்டு வருவது. செவிவழியாகக் கேட்டுக் கேட்டுப் பாடப்படுவதால், அவ்வப்போது, ஒவ்வொருவராலும் சேர்க்கைகளும், மாற்றங்களும் பெற்றுப் பாடல் மாறியபடியே இருக்கும். குழலுக்கேற்பப் பாடப்படும் தன்மையும் இதற்குக் காரணமாகும்.
மக்கள் பேச்சு மொழியில் இவை அமையும், வாய்மொழி இலக்கிய வகைகள், நாட்டுப்புற மக்களின் சமய மரபு, பண்பாடு, இசைமரபு, பேச்சுவழக்குச் சொற்கள், நாட்டுப்புற இலக்கிய வகைகள் என்பவைகளைக் கொண்டிருக்கும். இப்பாடல்கள் நில அடிப்படையில் வட்டாரப் பண்பைக் கொண்டிருக்கும். அது போலச் சாதிப் பண்புகளையும் கொண்டிருக்கும். எனவே, சாதி வட்டாரத் தன்மைகளுக்கேற்ப வேறுபட்டு அமையும்.
இப்பாடல்கள் சூழல் அடிப்படையில் பாடப்படுபவை. ஒருவராலோ, பலராலோ குழுவினராலோ இவை பாடப்படும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகளின்போது பாடப்படும் பாடல்கள், சமயப்பாடல்கள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிற்களப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், பொழுது போக்குப் பாடல்கள் என்று பலவகையாக வை அமையும், இப்பாடல்கள் யாவும் இசை மரபிற்கு உட்பட்டவை. செவ்வியல் லக்கியங்களுக்குரிய இலக்கணங்கள் இவற்றில் இடம் பெறா.
இப்பாடல்களைத் தொகுத்து வகைப்படுத்தி, வைகளுக்கு விளக்கமும் திறனாய்வும் அறிஞர் கூறினர். இப்பாடல்களைக் கள ஆய்வில் மக்களிடமிருந்து தொகுத்தனர். பாடப்படும்போது அதே சூழலில் தொகுத்து வகைப்படுத்தினர். இப்படித் தொகுத்த ஆய்வாளர்கள் மூலமே நமக்குப் பாடல்கள் கிடைத்தன.
பாடல்களின் வகை
வாய்மொழி இலக்கியப் பாடல்களைப் பல்வேறு வகைகளாக அறிஞர்கள் பகுத்துள்ளனர். தாலாட்டுப்பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் முடிய மனித வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களை வகைப்படுத்தி உள்ளனர். தொழிற் களத்தில், தொழில் செய்யும்போது பாடப்படும் பாடல்கள் ஒருவகை, நடவுப்பாடல், ஏற்றப்பாடல், தெம்மாங்கு, கதிரறுப்புப் பாடல் என்று அவை அமையும்.
ஏசல்பாட்டு, கேலிப்பாட்டு என்பனவும் அமையும். திருவிழாக்களிலும் சமயச் தடங்குகளிலும் வழிபாட்டிலும் ஏராளமான பாடல்கள் உள்ளன. சான்றாக, முளைப்பாரி, கும்மி, கோலாட்டம், வருணிப்புப்பாடல் உடுக்கடிப் பாடல், நீண்ட கதைப்பாடல்கள் என்று நாட்டுப்புறச்சமயஞ்சார்ந்த பாடல்கள் அமையும்.
மேலே கூறிய பெரும் பிரிவுகள் அல்லாமல் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் நிறையக் காணப்படும். நாட்டுப்புற இலக்கியப் பாடத்தில் இதை விரிவாக அறிந்து கொள்ளலாம். கவிதை என்ற இலக்கிய வகையில், வாய்மொழி இலக்கியம் குறித்த வகைப்பாடு.
அதன் அடிப்படை என்ற அளவிலே இதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து, எழுத்திலக்கியம் எந்த அளவிற்கு இலக்கிய மரபுகளைப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்ள மட்டுமே நமக்கு இது தேவை. தொல்காப்பியர் பண்ணத்தி, பிசி. முதுமொழி, அங்கதம் போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளைக் கூறியுள்ளார்.
சங்க அக, புறப் பாடல்களில் வாய்மொழி இலக்கிய மரபுகள் பல இடம் பெறுவதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நம் மொழியில் மட்டுமல்லாமல், கிரேக்கம், வடமொழி போன்ற மொழிகளிலும் இவ்வாறு வாய்மொழி மரபின் செல்வாக்கு இருப்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே திறனாய்வு நோக்கில் ஒப்பிட்டறிய வாய்மொழி இலக்கியம் - கவிதை - குறித்த அறிமுகம் நமக்குத் தேவை.
பாடல்களின் பாகுபாடு
மனித வாழ்க்கையில் இடம் பெறும் நிகழ்வுகள் அடிப்படையில் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்கள் ஒரு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பாடல்கள் போல்வன தாலாட்டு, ஒப்பாரி, திருமணச் சடங்குப் எழுத்திலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இலக்கண மரபுகள் இடம் பெறா என்று முன்னர் பார்த்தோம்.
ஆனால் வாய்மொழி இலக்கியச் செல்வாக்கினால் உருவாகும் எழுத்திலக்கியம் இலக்கண மரபுகளோடு படைக்கப்படும். சான்றாக, வாய்மொழி இலக்கியத்திலுள்ள தலாட்டுப் பாடலில் இலக்கண மரபுகளைத் தேட முடியாது. ஆனால், குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டு, பெரியாழ்வார் பாடிய தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு ஆகியன யாப்பு நெறிக்கு உட்பட்டு அமைந்தவை.
தொழிற்களப் பாடல்களில் பல்வேறு வகையான தொழில்களுக்குரிய பாடல்கள் உள்ளன. உழவுத் தொழில் சார்ந்த நடவுப்பாடல்கள், பள்ளு இலக்கியத்தில் நடவுப் பாடல் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தவை. சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம், பொலிக பாட்டு (அறுவடை முடித்து நெல் தூற்றும்போது பாடப்படுவது) போன்ற பாடல் வகைகள்கூறப்பட்டுள்ளன. பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்பு இவ்வகைப் பாடல்கள் வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து எழுத்திலக்கியம் பெற்ற வகை என்று கூறலாம். தமிழ் இலக்கிய மரபில் இம்மாதிரியான இலக்கிய வகைகள் நிறைய பாடல்களில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல், உள்ளன. சமயப் கொண்டாட்டப் பாடல் போல்வன எழுத்திலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
சான்றாகக் 'கண்ணுடைய அம்மன் பள்ளு' நூலில் முளைப்பாரிப்பாட்டு, கும்மிப்பாடல் போல்வன உள்ளன. வாய்மொழி இலக்கியத்தில் இருந்து இந்த இலக்கிய வகைகள் தோன்றி, எழுத்திலக்கிய படைப்பாக இலக்கணம் மரபுடன் உறுபெற்றன. பாடு பொருள் பாடப்படும் சூழல் என்ற அடிப்படையில் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியப் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
