வாழ்க்கையில் நாம் சாதனை செய்வதற்கு சில ஆலோசனைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு நமது நாம் தமிழர் களஞ்சியத்தை முழுவதுமாக தொடருங்கள்.
பிரபஞ்சத்தில் பிறந்த மக்களின் எண்ணங்கள் பெரும்பாலும் இருப்பவைகள்.
அதிகப்படியான மக்கள் தனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வேலை மற்றும் அந்த வேலையில் அவர்களுக்கு தேவையான வருமானம் ஒரு குடும்பம் இருந்தால் மட்டும் போதும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களே அதிகப்படியான மக்களாக இருக்கின்றனர்.
இன்னும் சில நபர்கள் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே கடைசி வரைக்கும் தனியாகவே வாழ்ந்து அவர்கள் காலத்தை கழித்துக் கொண்டிருப்பார்கள்.
சில நபர்கள் மிகவும் நல்லவர்களாகவும் எந்த தவறையும் செய்யாமலும் வாழ்க்கையில் கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு கடவுளின் மேல் அதிகப்படியான நம்பிக்கை வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்.
சில நபர்கள் தானும் வேலை செய்யாமல் அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் இருப்பார்கள்.
சில நபர்கள் இது மட்டும் தான் நம்மால் முடியும் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
சில நபர்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த வேலை தான் சமூகத்தில் செய்தால் நமக்கு மிகவும் பெருமை கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அதற்காக கடினமாக உழைத்து அந்த வேலையை தனது இலக்காக வைத்து அதில் வெற்றி பெற்று அதனை அவர்கள் ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சில நபர்கள் ஏதாவது ஒரு போதைப் பொருளுக்கு முழுமையாக அடிமையாகி அதில் காலம் முழுவதும் போதையிலேயே மூழ்கிக் கொண்டு இருப்பவர்கள் சில பேர்.
சில நபர்கள் தனது பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்து மதிப்புகளை செலவு செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்.
இன்னும் சில நபர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு சாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று வீட்டுக்குள்ளேயே முடங்கி கொண்டிருப்பவர்கள் சில பேர்.
நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பல்வேறு வகையான எண்ணத்துடன் அவரவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
பிரபஞ்சத்தில் சில நபர்கள் மட்டுமே தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதில் அவர்களுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி அதில் சாதனை செய்பவர்கள். அவர்கள் செய்த சாதனையை யாரும் முறியடிக்க கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுடைய சாதனையை மறுபடியும் அவர்களே முறியடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களே உலகத்தில் சாதனையாளர்களாக இருக்கின்றனர்.
நேர்மறையான எண்ணங்கள் தொடர் முயற்சிகள் மட்டுமே ஒருவனை சாதிப்பதற்கு தூண்டுகிறது. எனவே வாழ்க்கையில் நமக்கு பிடித்த துறையில் நம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அதில் நாம் சாதனை செய்ய வேண்டும்.
ஒரு கிராமத்தின் கதை:
ஒரு அழகான கிராமம் அதில் பல்வேறு வகையான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. பெரும்பாலான கிராமத்து மக்கள் அவர்களது பிள்ளைகளை அந்த கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் அந்த ஊரில் இருக்கும் பாதி மக்கள் மட்டுமே அந்த அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிப்பதற்கு அனுப்புவார்கள். மீதி பாதி இருக்கும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வியில் பயில்வதற்கு அனுப்புவார்கள். எனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண் பிள்ளைகள் மட்டுமே பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து எங்கே வேண்டும் என்றாலும் சுற்றிவிட்டு பொழுது போய் வீட்டிற்கு வருவார்கள். ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி அல்ல. பெண் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் வீட்டு வேலையை செய்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்கள் கூறியிருந்தனர். அந்தப் பெண் பிள்ளைகளோ வீட்டிற்குள்ளேயே தினமும் இருந்து அவர்களுடைய மனநிலையானது மிகவும் பாதிப்படைந்தது.
பெண் பிள்ளையாக இருந்தால் கூட நீங்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் வெளியில் சென்று அடிக்கடி புதிய புதிய அனுபவங்களை வெளியில் உள்ள பகுதிகளுக்கு சென்று பெற வேண்டும். தீய எண்ணங்களை அறவே மறந்து நல்ல செயல்களை செய்து பல்வேறு வகையான திறமைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே பெற்றோர்களாகிய அனைவரும் பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி நீங்கள் இருவரையும் சன்மான முறையில் நடத்த வேண்டும். இருவருக்கும் ஒரே மன நிலையாக இருக்கும். எனவே ஆண் பிள்ளைகளை மட்டும் நீங்கள் சுதந்திரமாக விட்டுவிட்டு பெண் பிள்ளைகளை நீங்கள் வீட்டிற்குள்ளே இருக்க வைத்து அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுகிறது. எனவே அவர்கள் விருப்பம் போல் நீங்கள் அவர்களை வளர்த்து விட வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் அடிக்கடி அவர்களை வெளியே அழைத்துச் சென்று மிகவும் சந்தோஷமாக இருக்க வைக்க வேண்டும். அவர்களுடைய திறமையை நீங்கள் அதிகரிப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
பெற்றோர்களாகிய அனைவரும் தனது பிள்ளைகளுக்கு படிப்பினை படிக்க சொல்லித் தருவது மட்டுமல்லாமல் அவர்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு அந்த திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நீங்கள் காட்ட வேண்டும். எனவே வாழ்க்கையில் அவர்கள் பிடித்த வேலையை செய்வதற்கு நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
