Wednesday, 31 December 2025

சாதனையை கொண்டாட வேண்டும் - வாழ்க்கை நம்பிக்கை துளிகள்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்வான எண்ணங்களை கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக இழக்க வைத்து அந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும். பல்வேறு நபர்கள் பல்வேறு வகைகளில் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்திருப்பார்கள்.

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கூறியிருப்பார்கள். அதில் நீங்கள் எது உங்கள் வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என்று ஆராய்ந்து அதனை நோக்கி நீங்கள் உங்களது முயற்சிகளை எடுக்க வேண்டும்.

உங்களது வாழ்க்கையில் நீங்கள் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். பொன் பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஆசைப்படக்கூடாது. இப்படி ஆசைப்பட்டார் உங்களால் சாதனையாளர்களாக வர முடியாது. நான் இதற்கு முன்பு பார்த்தபடி சாதனை நோக்கி செல்ல வேண்டும். 

முதலில் சாதனையை நோக்கி எப்படி பயணிக்க வேண்டும்? 

உங்களால் முதலில் ஒரு காரியத்தை நன்றாக செய்ய முடியும் போது அந்த காரியத்தை நீங்கள் சரியாக முடிக்க வேண்டும். நீங்கள் செய்யும் காரியத்தை ஏதோ வியனோதானோ என்று செய்வதை முதலில் நிறுத்தி விடுங்கள். 

ஆரம்பத்திலேயே நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எனவே முதலில் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம். பொதுவாக நிறைய பேர் சாப்பிட்டு சாப்பிட்டு இடத்திலேயே கைகளை கழுவி விட்டு அப்படியே எழுந்து விடுகிறோம். ஏனென்றால் நாம் சாப்பிட்ட தட்டு நமது அம்மாவோ அல்லது நமக்கு நெருங்கியர்களோ எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணமே. இந்த தட்டை எடுத்து வெளியில் ஊற்றுவதற்கு என்ன உங்களுக்கு சோம்பேறித்தனம். 

முதலில் இது பல சின்ன சின்ன விஷயங்களில் நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

 எனவே நீங்கள் சாப்பிட்ட தட்டை முதலில் நீங்கள் எடுத்து வெளியில் ஊற்றுவதற்கு பழகிக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் சிறிய சிறிய விஷயங்களில் கூட சோம்பேறித்தனம் பண்ணாமல் தொடர்ந்து சாதிக்க துடிக்கும் நபர்கள் நல்லதொரு தொடக்கமாக இருக்கும். 

மேலும் நீங்கள் எந்த வகையான வேலையை செய்தாலும் அந்த வேலையை நீங்கள் சரியாக முடித்து விடுங்கள். நீங்கள் தொடர்ந்து இதுபோல சின்ன சின்ன விஷயங்களில் உங்கள் சோம்பேறித்தனத்தை உதறி தள்ளினால் உங்களுக்கு உங்களுடைய மீது சிறிதளவு மதிப்பு வருவது போல் தெரியும். நீங்கள் பெரிய சாதனையாளர்களாக வர வேண்டும் என்று ஆசைப்படும்போது அந்த ஒய் இங்கே உங்களை எல்லாம் வழிநடத்தும். 

வெற்றியை நோக்கி முயற்சி செய்பவர்கள் முதலில் உங்களுக்கான இலக்கை மிகச் சரியாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இலக்குகளை சரியாக தீர்மானிக்க தெரியாத ஒருவனுக்கு கண்டிப்பாக சாதனையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முடியாது. தனது முயற்சிகளுக்கு முழுக்க முழுக்க எவர் ஒருவர் தனது வெற்றிக்கு முழுக்க முழுக்க தன்னை அர்ப்பணிக்க துணிபவர்கள் வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். நாம் இலக்கை நோக்கி பயணிக்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களது இலக்கை சென்றடையும் போது உடனே நாம் இலக்கை அடைந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது. அப்படி ஏதாவது நீங்கள் நினைத்தால் உடனே அந்த இடத்தில் வியந்து விடுகிறீர்கள். 

எனவே இடைவிடாத முயற்சியும் மற்றும் உங்களுடைய மனம் மேலும் உங்களுடைய உடல் சார்ந்த உழைப்புமே உங்களை வெற்றியடைய செய்வதற்கான வழியாகும். மேலும் நீங்கள் நினைத்த நேரத்தை விட உங்களை மிக விரைவாக சாதனையாளர்களாக மாற்றுகிறது. எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இதை முடிக்க வேண்டும் என்று நீங்கள் இலக்கை வைத்து அதனை நோக்கி உங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்த வேண்டும்.

Comments


EmoticonEmoticon