உலக அரங்கில் மௌனத் திரைப்படங்கள் (ஊமைப் படங்கள்) தோன்றி வளர்ந்த வளர்ச்சியையும், இந்தியத் திருநாட்டில் மௌனப் படங்கள் அறிமுகமான வரலாறு. 383 நம்மவர்கள் மெள்ளப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கிய நிலை. திரையரங்குகளின் வளர்ச்சி முதலிய மெளனப் பட வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.
உலகில் மெளனத் திரைப்படக் காலம்
1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் நாள் பாரீஸ் மாநகரில் 'பொலிவார்ட்டி கேப்புசின்ஸ்' என்னும் பகுதியில் மியர் சகோதரர்கள் மக்கள்முன் திரையிட்டுக் காட்டிய ஒவ்வொரு நிமிட நேரப்படங்களான குறும்படங்கள் அனைத்தும் பேச்சும் ஒலியுமற்ற மௌனப் படங்களே ஆகும். அந்த நாள் முதலாகவே மெனைப் படங்களின் காலம் தொடங்குகிறது
பாரிங்ஸில் முதல் திரையரங்கை அமைத்தவர்களும் லூமியர் சகோதரர்களே ஆவர்.
பொலிவார்ட்டி கேப்புசின்ஸ் பகுதியில் 'கிராண்ட் கேப்' என்ற பெயரில் ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது. தூமியம் சகோதரர்கள் அவ்விடுதியின் கீழ்த்தளத்தை வாடகைக்கு அமர்த்தி 'சினிமாட்டோகிராஃபிக் துமயரே' என்ற பெயரில் ஒரு திரையரங்கினைத் தொடங்கினார்கள். அதில் ஒரு காட்சி 20 நிமிட நேரம் என்ற அளவில் பல துண்டு துண்டான திரைப்படங்களைக் காட்டினார்கள்.
லூமியர் சகோதரர்கள் காட்டிய அத்திரைப் படங்களின் தரம் வெகு சிறப்பாக இருந்தது.
என்று சொல்லமுடியாது. திரையிடப்பட்ட படங்கள் திரையில் துடிதுடித்து ஆடின புரஜெக்டர் பெரிதாகச் சப்தமிட்டு இரைந்தன. சிரமங்களுடன் தான் மக்கள் அவற்றைக் காணநேர்ந்தது. இருப்பினும், அக்காலச் சூழலில் திரைப்படம் என்பது ஒரு புதுமையானதாக இருந்ததால், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூடிநின்று. பார்த்துக்களித்தனர்.
மருத்துவர் துணையுடன் மௌனப் படங்கள்
1895இல் பாரீஸ் மாநகரில் லூமியர் சகோதார்கள் முதன்முதலில் திரையிட்டுக் காட்டிய 'ஒரு ரயிலின் வருகை' என்ற திரைப்படம் அக்கால மக்களை மிகவும் கவர்ந்தது என்பர். அதற்குக் காரணம்.
ரயில் எஞ்சின் வரும்போது அக்காட்சி தத்ரூபமாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதனால், அதைப் பார்க்கக் கூடிய மக்களுக்கு எஞ்சின் தங்கள் எதிரில் தங்களை நோக்கி வருவது போலவே உணர்ச்சியைத் தோற்றுவித்தது.
பெண்கள் பயத்தால் மயங்கி விழுந்தனர். இதனால், இத்தகைய காட்சிகளில், பெண்களின் மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவம் பார்க்கச் செவிலியர் தயாராக இருக்க வேண்டிய நிலை எற்பட்டது இப்படி மருத்துவர் துணையுடன் மௌனப்படங்கள் காட்டப்பட்டன.
பலவகைக் குறும்படங்கள்
லூமியர் சதோதரர்களின் குறும்படங்கள் உலகெங்கும் கிளர்ச்சியை உருவாக்கின இதன் விளைவாக நாட்டில் நிலவிவந்த கிராமியக்கதைகள், புராணங்கள் கூறும் கற்பனைக்கதைகளைச் சித்திரிக்கும் ஊமைப் படங்களைப் பலரும் தயாரித்துத் திரையிட்டனர். வீர சாகசங்கள், குத்துச் சண்டைகள், நடனக் காட்சிகள் முதலிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறைந்த சற்று நீண்ட நிரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன.
தந்திரக் காட்சிகள் நிறைந்த படம்
மௌனப்பட வளர்ச்சியில் 1903ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்கதாகும். ஜார்ஜ் மெலெ என்பவர் 1903இல் தயாரித்தளித்த 'தேவதைகளின் ராஜியம்' (The Kingdom of the fairies) என்ற திரைப்படம் தந்திரக்காட்சிகள் நிறைந்து, ஸ்டுடியோ- செட், ஒப்பனை, கதை போன்ற திரையுலக நுட்பங்களில் வளர்ச்சியை எட்டிய திரைப்படம் என்ற பெயரினை அது பெற்றது.
அதைத் தொடர்ந்து 1904ஆம் ஆண்டு வெளிவந்த 'மிகப் பெரிய ரயில் கொள்ளை' (The Great Train Robbery) என்ற படம் எட்வின் போர்ட்டர் தயாரித்த மிகப் புகழ் பெற்ற திரைப்படமாகும்.
சாப்ளின் படம் :
மௌனப்படக் காலத்தில் சார்லி சாப்ளின் நடித்தும் இயக்கியும் தயாரித்தும் அளித்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. தி கிட் (The Kid), தி கோல்டு ஏஷ் (The Gold Rush), தி சர்க்கஸ் (The Circus), சிட்டி லைட்ஸ் (City Lights) முதலியன அவற்றுள் பேசத்தக்க மௌனப் படங்கள் ஆகும்.
உலகின் முதல் படாதிபதி :
சினிமாவால் மிகப்பெரும் செல்வச்சீமானாகவும், உலகின் முதல் பட அதிபராகவும் விளங்கிய ராபர்ட் டபிள்யூ பால், கி.பி.1920இல் ஒருநாள், தான் தயாரித்த அனைத்துத் திரைப்படங்களையும் தீயிட்டுப் பொசுக்கிவிட்டார். காரணம், சினிமா பார்க்க வந்தவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டதால் என்பர். சினிமா ஒரு மட்டரகமான கேளிக்கை என்பதும், மக்களின் கீழ்த்தரமான உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஒரு பிசாசு என்பதும் அவரது இறுதிக்காலக் கருத்தாக இருந்தது.
திரைப்படங்களுக்கு எதிர்ப்பும் ஹாலிவுட் தோற்றமும்
பிரெஞ்சு நாட்டில் லூமியர் சகோதரர்களின் முதல் திரைப்படம் அரங்கேறியதைத் தொடர்ந்து உலகின் வளர்ந்த நாடுகளில் எல்லாம் திரைப்படம் வேரூன்றத் தொடங்கியது. அவற்றுள் அமெரிக்க நாடு திரைத்துறையில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டது அப்போது அங்கிருந்த மத வெறியர்களும் பிற்போக்குவாதிகளும் திரைப்படத்தை எதிர்த்தனர்.
"இது சாத்தானின் நாச வேலை! பில்லி, குன்யா போன்று கொடுமையானது இந்தச் சினிமா!" என்று வருணித்தனர். சினிமா தயாரிப்பாளர்களும், சினிமாத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்களும் மத வெறியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் அவர்கள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
பழமைவாதிகளாலும் மத வெறியர்களாலும் இத்தகைய பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் கொடியவர்களுக்கு அஞ்சி அமெரிக்கத் தலைநகரை விட்டு வெளியேறினர். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒளித்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது.
அங்கிருந்தபடியே திரைப்படத் தொழியில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தப் பயங்கரமான காட்டினை 'ஹோலி வுட்' (Holy wood புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் 'ஹாலிவுட்' நகரமாகும்.

