Wednesday, 31 December 2025

கலித்தொகை நூலின் சிறப்புகளும் பாடல்களும்

 நூல் அறிமுகம்

கற்றறிந்தார் ஏத்தும் கலி எனப் பாராட்டப்பெறும் இந்நூல் அகப்பொருள் பற்றிய நூற்றைம்பது கலிப்பாவினாலான செய்யுட்களைக் கொண்டு இலங்குகின்றது. பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஐந்து பகுதிகளையும் முறையே பாலை பாடிய பெருங்கடுங்கோ. கபிலர், மருதனிளநாகனார், நல்லந்துவனார் சோழன் நல்லுருத்திரன் ஆகிய ஐவரும் பாடியுள்ளனர்.

கல்விவளார் கண்டகலி என பெருமையுரும் இந்நூலுக்கு உண்டு. சிற்றெல்லையாகப் பதினொரு அடிகளையும், பேரெல்லையாக எண்பது அடிகளையும் கொண்டுள்ளது. இந்நூலைக் கடவுள் வாழ்த்தொடு ஐந்தாம் கலியையும் பாடி, நல்லந்துவனாரே தொகுத்துள்ளார். 

கலித்தொகையின் முதற்பகுதியாகிய பாலைக் கலியை முப்பத்தைந்து பாடல்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோவும். இரண்டாங் கலியாகிய குறிஞ்சியைக் கபிலர் 29 பாடல்களிலும், மூன்றாவது கலியாகிய மருதத்தினை மருதனிள நாகனார் 35 பாடல்களிலும் நான்காவது கலியாகிய முல்லையினைச் சோழன் நல்லுருத்திரன் 17 பாடல்களிலும், ஐந்தாவது கலியாகிய நெய்தலினை நல்லந்துவனார் 33 பாடல்களிலும் பாடியுள்ளனர்.

நூலின் சிறப்புகள்

காளைக்கு அஞ்சும் காளையர்களை கோழையர்களை மறுமையிலும் புல்ல நினையாள் என்பதை

"கொல்லோற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்".   -(103:63-64)

என ஆணவத்தோடு அறைந்து நிற்பதைக் காணலாம்.

காதல் பற்றிய பல பாடல்கள் உரையாடல் முறையில் அமைந்து சிறக்கின்றன. இதிகாசச் செய்திகள் சில உவமைகளின் வாயிலாய் விளங்குகின்றன. இன்பத்தை அழகுற அறைந்து நிற்கும் அழகு தமிழ் நூலுள் கலை, பொருள் வாழ்க்கை நுட்பம் முதலிய பல்வேறு கருத்துக்களைக் காணலாம்.

அருமை மிகுந்த நம் தமிழ்த்தாயின், அழகு மிகுந்த அணிவகைகள் பலவற்றுள்ளும், ஒளி மிகுந்த இரத்தினக் கற்களாலே இழைத்துச் செய்துள்ள, செம்பொன்னின் செய்வினைத் திறனெல்லாம் நிரம்பிய நல்லணிகளாகத் திகழ்வன. கலித்தொகை செய்யுள்கள் ஆகும். 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்ற பழங்காலச் சான்றோரின் மதிப்பீடு, மிக மிகப் பொருந்துவதே என்பதைச் சொல்லுக்குச் சொல் கருத்துக்குக் கருத்துச் சுவைகனியும் தமிழ்த் தேறலாக அமைந்த இந்நூலின் செய்யுள்கள் அனைத்தும் காட்டுவன. அவை, கற்பவரின் உள்ளத்தே கரையிலாக் களிப்பையும் வியப்பையும் உயிர்ப்பையும் உணர்வையும் ஏற்படுத்தியும் வருகின்றன.

இது 'கலி' எனவும் 'கவிப்பா' எனவும் 'கலிப்பாட்டு' எனவும் 'நூற்றைம்பது கலி' எனவும் பண்டை உரையாசிரியர்களால் குறிக்கப்படும். ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலியென்று சொல்லப்படும் நால்வகைப் பாவகையுள், இது 'கலிப்பா' வகையைச் சார்ந்தது. 'வெண்பா நடைத்தே கலியென மொழிப் என்பதனால, இதனை வெண்பாவின் பகுதியாகவும் சான்றோர் குறித்துக் காட்டுவர்.

செய்யுள்களின் இனிதான துள்ளல் ஓசை நயமும், உவமைகளின் திறமும். உரைக்கப்படும் அறங்களின் செறிவும், எடுத்துக்காட்டும் பொருள்களும், இவர்கள் அந்த அந்தத் திணைசார்ந்த விலங்குகளையும் நிலத்து மக்கள் வாழ்வையும் நன்கு பழகி அறிந்தவர்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.

கலித்தொகை செய்யுள்கள், முன்னிலைப் பேச்சாகவே அமைந்தன. பேசுவார் பேச்சோடு நம்மையும் இணைத்துப் பிணைப்பன, அவர்தம் உணர்வுகளோடு நம்மையும் ஒருங்கே இணைப்பன: ஓர் அருமையான கனிவையும் நிறைவையும் நமக்கு எழச் செய்வன. நிறைதமிழின் நீர்மையெல்லாம் தம்பாற் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையினாலே, கலித்தொகைச் செய்யுட்கள் தீட்டிக் காட்டும் காவிய நாடகங்களுள், நாமும் ஒருவராகவே கலந்து நுகர்கின்ற இன்பமயக்கமும் நமக்கு மனத்திரையில் உண்டாகிறது.

மக்களின் இயல்பான வாழ்வியலை விளங்கச் செய்வதுவே இக்கலியிலுள்ள செய்யுள்கள், அக்காலத்து ஐவேறு நிலத்தவர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைமையினையும் சுவை குன்றாமல் அழகோடும் நயமாகவும் விளக்குகின்றன. இயல்பிறந்த கற்பனைகளாகய் பாடாமல், இயற்கையின் கண் தோன்றும் செவ்விகளையே அழகுறச் சொல்லோவியப்படுத்தி அமைந்துள்ளன. அவ்வழகுகள் சொல்லோவியத்திறந்தால் அவை தாமும் மேலும் அழகுபெற்று நம்மையும் களிப்பூட்டுகின்றன.

கலித்தொகைச் செய்யுள்களைப் பாடிய புலவர்களின் இலக்கு, குறிக்கோள், எதுவாக இருக்கும் என்று கருதினோம் என்றால், அது தம்முடைய புலமையைக் காட்டிப் பெருமை பெறுவதற்கோ, அல்லது பிறரை உவப்பித்து பொருள் அடைவதற்கோ, மேற்கொண்டது. இல்லை என்பதும் விளங்கும். எல்லாச் செய்யுள்களும், அக்காலத்து மக்களின் வாழ்வியலை ஒவியப்படுத்திக் காட்டுவதன் மூலம், பிற்காலத்தார் அறிந்து மகிழவும், புரிந்து மேற்கொள்ளவும். கருணையோடு செய்யப்பெற்ற உயிரோவியங்களாகவே உள்ளன. அன்பையும் ஆண்மையையும் பண்பையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழரின் நல்லற வாழ்க்கையையே எம்மருங்கும் கலியில் கவினுறக் காணலாம்.

இத்தொகையின் இன்னொரு சிறப்பாவது, இதன்பாலுள்ள ஐந்தில் இரண்டைப் பாடியவர் சேரரும், சோழருமான தமிழரசர் குடியில் பிறந்தாராக விளங்குவதாகும். அவர்தம், தம் செய்யுள்களில் பாண்டிய நாட்டை மனங் கலந்து போற்றிப் பாடியிருப்பது, பாண்டியரின் பண்பு மேம்பாட்டிற்கு நல்ல சான்றாகும். அவர்தம் தமிழ்த் தலைமையின் செவ்வியை உணர்த்துவதுமாகும்.

தமிழறிந்தார் கற்றறிந்து இன்புறுதலின் பொருட்டாகத் தம்முடைய பெரும்புலமையால் இச்செய்யுள்களைச் செய்து வழங்கினோர். 1. பாலை பாடிய பெருங்கடுங்கோ. 2. கபிலர், 3. மருதனிள நாகனார், 4. சோழன் நல்லுருத்திரன், 5. ஆசிரியர் நல்லந்துவனார், என்போர் ஆவர். இவர்களின் சீர்த்த செய்யுள்களுக்கு முதலில் உரைகண்டவரோ, உச்சிமேற் புலவர் கொள்ளும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆவர்.

கலித்தொகை தமிழன்பர்களின் அறிவுக்கு விருந்தாகியது. அனைவரையும் களிப்பூட்டியது என்றால் மிகையில்லை. எந்தக் காலத்திற்கும் இன்றியமையாதது இந்நூல்.

பாடல் பொருள் விளக்கம்

முல்லைக்கலி

11. பேச்சுக்குப் பின்!

முல்லை - காடும் காடு சார்ந்த இடம்
கூற்று - தலைவிக் கூற்று
பாடியவர் -சோழன் நல்லுருத்திரனார்

துறை விளக்கம்

காதலோடு வந்த தலைவனைப் பேச்சினால் வெருட்டி விட்டாள் ஒரு கன்னி, அதன்பின் அவன் மேல் உள்ள காதலால், தன் தோழியிடம் சென்று. அவனிடம் தூது போக வேண்டுகிறாள். தனக்கு அவனுடன் திருமணம் நடைபெற வேண்டும் அதற்கு நீ அறத்தொடு நிற்க வேண்டும் என்கிறாள்.

கூற்று:

இஃது தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறு அவனைக் கூறியனவும் கூறித் தோழியைத் தலைவனை வரைவுகடாவியாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டுமென்றது.

பாடல்:

தீம்பால் கறந்த கலம்மாற்றிக் கன்றெல்லாம் தாம்பின் பிணித்து, மனைநிறீஇ, யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்அசைஇ,பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால்! தோழி -நம் புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்     ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்,மற்று என்னை, முற்றிழை ஏஎர், மடநல்லாய் நீஆடும் சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா!நீ பெற்றேம்யாம் என்று, பிறர்செய்த இல்இருப்பாய்; கற்றது இலைமன்ற காண்' என்றேன், முற்றிழாய்! தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ, நினக்கு, என்றான், 'எல்லா?நீ ஏதிலார் தந்த பூக்கொள்வாய்

Comments


EmoticonEmoticon