திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற திருமறையானது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக மதிக்கப்படுகிறது. இந்த திருமுறை மற்றும் இருமறை என்பதற்கு பெரிய வித்தியாசம் இல்லை. திருமுறைகள் அனைத்துமே திருமறைகள் தான்.
பொதுவாகவே நூல்களை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. காலத்திற்கு கட்டுப்பட்ட நூல்கள் (Books for hour).
2. காலத்தை கடந்து நிற்கக்கூடிய நூல்கள் (Books for ever).
இந்த நூல்களில் இறையருளால் எழுதப்பட்ட நூல்கள் அனைத்துமே காலத்தை கடந்து நிற்கக்கூடிய திறனை பெற்றவை. அவ்வகை நூல்களையே நாம் திருமறை என்று போற்றப்படுகிறோம்.
பொதுவாக நம்முடைய அறிவை பயன்படுத்தி எழுதக்கூடிய நூல்கள் காலத்தை கடந்து நிற்பதில்லை. ஏனென்றால் அவை தற்காலிக பயன்களை மட்டுமே தரக்கூடிய வகையாக இருக்கின்றன. நிரந்தரமாக பயன்களை தரக்கூடியதாக இருப்பதில்லை.
திருமுறைகள் என்றால் ரிக்,யசூர்,சாம, அதர்வண வேதங்களை தான் நம்முடைய சமயத்தின் வேதங்கள் என்னும் தவறான கருத்து மற்றும் அறிவு இல்லாத அப்பாவி தமிழர்கள் மண்டையில் பிற இன மக்களால் விதைக்கப்பட்ட அறியாமை விதை என்பதை நாம் உணர வேண்டும்.
பெரும்பாலும் நம் தமிழர்களை பொறுத்த வரைக்கும் திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் திருப்புகழ் திருப்பாவை திருவெம்பாவை திருவாய்மொழி திருவருட்பா தேவாரம் அன்னை அவ்வை பிராட்டியின் பாடல்கள் சித்தர்கள் அருளிய பாடல்கள் மகரிஷியின் பாடல்கள் இவை அனைத்துமே திருமறை தான்! என்பதை நாம் தெளிவுரை உணர வேண்டும். நம்முடைய அறிவிற்கு எது சரியாக தெரிகிறதோ அதை பின்பற்றி நீங்கள் முன்னேற வேண்டும்.
நம்முடைய தமிழ் மொழியில் உள்ள திருமறைகளுக்கு ஈடாக உலகில் எந்த இனத்திற்கும் இவ்வகையான கருத்துக்களை கூறும் நூல்கள் இல்லை என்பதே உண்மை.
இந்த திருமந்திரம் என்னும் நூலை அருளிய திருமலர் 3000 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்ந்ததாகவும் ஆண்டுக்கு ஒரு பாடல் எழுதி 3000 ஆண்டுகளுக்கு 3000 பாடல்களை எழுதினார் என்று கூறுவார்கள். ஆனால் ஒருவருக்கு கூட அவர் எப்போது வாழ்ந்தார் எங்கு வாழ்ந்தார் எப்படி இறந்தார் என்ற விபரங்கள் குறித்து தெளிவான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை என்பதே உண்மை.
சேக்கிழார் பெருமாள் எழுதியுள்ள திருத்தொண்டர் புராணம் என்னும் நூலில் திருமலை பற்றிய குறிப்புகள் மட்டுமே நமக்கு கிடைத்த ஒரு ஆதாரமாக இருக்கிறது.
கயிலை மலை என்னும் மலையில் வாய்ந்த சிவயோகி தான் இவர். நந்தியம் பெருமாள் இவருடைய குருநாதராக ஆவார். தில்லை சிற்றம்பலம் என்னும் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சாத்தனூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்த மூலன் என்னும் மாடு மேய்க்கும் ஒருவர் இறந்த உடலுக்குள் பரகாயப் பிரவேசம் செய்யக்கூடிய சூழ்நிலைக்கு ஆட்பட்டார். கண்ணீர் வடித்த அந்த இடையனுடைய பசுக்களை பத்திரமாய் கொண்டு போய் அதனுடைய இடத்தில் அடைத்து விட்டு திரும்பும் போது தன் சொந்த உடல் கிடைக்கவில்லை. எனவே திருமூலர் என்னும் திருநாமம் உடனே திருவாவடுதுறை கோவில் பிரகாரத்தில் இருந்த ஒரு அரச மரத்தின் அடியில் 3000 ஆண்டுகள் தவம் செய்து 3000 பாடல்களை எழுதிய திருமூலர் பாடல்களை வழங்கினார் என்பது அந்த வரலாறு ஆகும்.
இவருடைய வரலாற்றில் தெளிவில்லை என்றாலும் இவருடைய பாடல்கள் மிகவும் தெளிவானதாகும். அதே நேரத்தில் இந்த பாடல்கள் அனைத்தும் மிகவும் தீர்க்கமாக கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.
குறைவான வார்த்தைகள் மற்றும் அதில் அந்த பாடல்களில் அதிக ரகசியங்களை புதைத்து வைத்திருக்கக்கூடிய ஒரு அற்புதமான பாடல்களைக் கொண்டது தான் திருமந்திரம் ஆகும்.
இந்த உலகில் மூல மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழி என்னும் உயர்ந்த மொழி தன்னை பற்றி எழுதுவதற்காகவே இறைவன் தன்னை அனுப்பி வைத்தான் என்று நூல் எழுதியதன் நோக்கம் குறித்து சுய அறிமுகம் இவர் கூறியிருப்பது தான். இதுவே நம் தாய்மொழி தமிழ் மொழியின் பெருமையை உயர்த்துவதாக உள்ளது.
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
உன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யு மாறே!
நாம் தவம் செய்யாமல் எப்படி உயர்ந்த நிலையை அடைய முடியும்? நாம் தவம் செய்து இறைவனை அடையக்கூடிய வழிகளை கூறும் அரியனுதான் தமிழ் திருமறை நூல்கள் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை தெய்வத்தமிழ் மொழியில் புதுப்பித்து தர வேண்டி இறைவன் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளான் என்பது இந்த பாடலின் பொருளாகும்.
காலத்தை வென்ற மகான் என் வகை சித்துக்களும் கைவறப்பற்ற மாபெரும் சித்தர் ஆவார். இறைவனுக்காக அனைத்தையும் துறந்த துறவியாக உள்ளார். அந்த துறவி உடைய திருவாக்கல் இறைவன் தமிழில் தன்னைப் பற்றிய ரகசியங்களை சொல்வதற்காக என்னை படைத்து அனுப்பி உள்ளான் என்று கூறுவது. இந்த தமிழ் மொழியில் தெய்வீகத் தன்மையை நமக்கு நன்கு உணர்த்துகிறது.
எனவே தமிழ் தெரியாது என்று நீங்களும் சொல்லாதீர்கள் உங்கள் பிள்ளைகள் பேரன்பேசிகள் சொல்லும் நிலையையும் நீங்கள் வைத்துக் கொள்ளக் கடாது.
அனைத்து வகையான ஞான ரகசியங்களையும் தெரிந்து கொள்ளக்கூடிய முதல் தகுதி தமிழ் மொழிக்கு தான் உள்ளது. எனவே தமிழ் மொழியை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது.
இனி வரக்கூடிய காலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியை தேடி வரக்கூடிய காலம். உலகம் தேடிவரும் நிலையில் நீங்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாமல் இயந்துவிடாதீர்கள்.
ஆங்கிலம் ஹிந்தி மற்றும் பிற மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழிகளை கற்றுக் கொள்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அது உங்களுக்கு தற்போது மட்டுமே உதவியாக இருக்கும். ஆனால் இன்றைக்கும் என்றைக்கும் உதவும் ஒரே மொழி தமிழ் மொழி தான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
எனவே திருமூலர் கூறும் ஒரே ரகசியம் இதுதான். தமிழ் மொழி என்பது ஒரு தெய்வீக மொழியாகும்.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கின்றனர். இந்த தமிழ் மொழியானது உலகின் மிக அற்புதமான மொழிகளில் ஒன்றாகும். எனவே தமிழ் மொழியை நாம் கற்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் பல்வேறு வகையான மொழிகளை பயின்றாலும் நீங்கள் தமிழ் மொழியை எப்பொழுதும் மறக்க கூடாது.
