தமிழைப் பிழையின்றி எழுதுவோம்!

நமது எண்ணங்களைப்‌ பிறருடன்‌ பகிர்ந்து கொள்வதற்காக உருவானவை மொழிகள்‌. முதலில்‌ சைகைகளும்‌, ஒலிகளும்‌ கருத்துகளைப்‌ பரிமாறப்‌ பயன்படுத்தப்பட்டன. பின்னர்‌, ஒலிகள்‌ மெதுவாக உருமாற்றம்‌ அடைந்து மொழியாக மாறின. இவ்வாறு உருமாற்றம்‌ அடைந்து வளர்ந்த மொழிகளில்‌ இணிமையானதும்‌, வாழ்வியலோடு இணைந்ததுமாய்‌ விளங்குவது தமிழ்மொழி.

இவ்வாறு, சிறப்பு வாய்ந்ததாய்‌ விளங்கும்‌. தமிழ்மொழியின்‌ எழுத்துகள்‌, அவற்றின்‌ ஒலிப்புமுறை, உருவ அமைப்பு ஆகியவற்றைப்‌ பற்றி நாம்‌ இங்கு அறிந்துகொள்வோம்‌.

எழுத்துகளின்‌ வகைதொகை

தமிழ்‌ எழுத்துகள்‌ உயிர்‌, மெய்‌, உயிர்மெய்‌, ஆய்தம்‌ என நான்கு பிரிவுக்குள்‌ அடங்கும்‌.

இவற்றின்‌ பெயர்‌ அடிப்படையில்‌ இவற்றிற்குரிய பொருள்‌ விளக்கத்தை நாம்‌ தெரிந்துகொள்வோம்‌.

மொழிக்கு உயிர்போல்‌ விளங்குபவை, உயிர்‌ எழுத்துகள்‌. 'அ முதல்‌ 'ஒள' வரையிலான பன்னிரண்டும்‌ உயிர்‌ எழுத்துகள்‌. மொழிக்கு உடல்போல விளங்குபவை, மெய்‌ எழுத்துகள்‌. 'க்‌' முதல்‌ ன்‌! வரையிலான பதினெட்டும்‌ மெய்‌ எழுத்துகள்‌.

உடலும்‌ உயிரும்‌ இணைந்து மணிதன்‌ உருவாவதுபோல, உருவாகும்‌ எழுத்துகளேஉயிர்மெய்‌ எழுத்துகள்‌. 'க! முதல்‌ 'ணனெள' வரையிலான 216 எழுத்தும்‌ உயிர்மெய்‌ எழுத்துகள்‌.

க்+அ=க

க்+ஆ=கா

என 216 உயிர்மெய்‌ எழுத்தும்‌ உருவாகும்‌.

மனிதர்களின்‌ உருவத்தை நாம்‌ காணலாம்‌. ஆனால்‌, அவர்களின்‌ உயிரினைக்‌ காண முடியாது. அவர்களது அசைவின்‌ மூலமும்‌ பேச்சின்‌ மூலமும்‌ அவர்களின்‌ உயிரை நாம்‌ உணர முடியும்‌. அதுபோலவே 'க்‌' என்னும்‌ மெய்யைக்‌ கண்ணால்‌ காணலாம்‌. அ! என்னும்‌ உயிரை ஒலிக்கும்போது உணர முடியும்‌.

மெய்யெழுத்துடன்‌ உயிரெழுத்துச்‌ சேரும்போது புதுஎழுத்துப்‌ பிறக்கிறது. ஆனால்‌, அதை நாம்‌ மெய்யுயிர்‌ என்று சொல்வது இல்லை. ஏனெனில், 'க' என்பதில்‌ அ என்னும்‌ உயிரே  ஒலிக்கிறது. இதனால்‌ மெய்யொலிகள் இயங்க உயிரொலிகள்  காரணம்‌ என்பதால்‌ உயிரை முன்வைத்து உயிர்மெய்‌ என்று கூறுகிறோம்‌.

இவ்வாறு, அனைத்து எழுத்துகளும்‌ சேர்ந்து மொத்த எழுத்துகளின்‌ எண்ணிக்கை 247 ஆகிறது.

உயிர்‌ எழுத்துகள்‌ - 12

மெய்‌ எழுத்துகள்‌ - 18

உயிர்மெய்‌ எழுத்துகள்‌ - 216

ஆய்த எழுத்து - 1

மொத்தம்‌ - 247

குறிலும்  நெடிலும்‌

எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படுத்தலாம்‌. உயிர்‌-12, மெய்‌-18 ஆக 30 எழுத்தும்‌ முதலெழுத்துகள்‌ ஆகும்‌. இவற்றைச்‌ சார்ந்து வருபவை சார்பெழுத்துகள்‌ ஆகும்‌.

தமிழ்மொழியிலுள்ள சொற்களை ஒலிப்பதற்கு, முதல்‌ எழுத்துகளைச்‌ சரியாக ஒலிக்க பயிற்சி செய்தாலே போதுமானது. உயிர்‌ எழுத்துகளை நீட்டியும்‌, குறுக்கியும்‌ ஒலிக்க வேண்டும்‌. மெய்‌ எழுத்துகள்‌ அனைத்தையும்‌ ஒரே அளவில்‌ ஒலிக்க வேண்டும்‌. 

இவ்வாறு உயிர்‌ எழுத்துகள்‌, ஒலிக்கும்‌ அளவைப்‌ பொறுத்து குறில்‌, நெடில்‌ என இரண்டாகப்‌ பிரியும்‌. இதன்படி,

அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து எழுத்தும்‌ குறில்‌ எழுத்துகள்‌

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு எழுத்தும்‌ நெடில்‌ எழுத்துகள்‌

இந்த உயிர்‌ எழுத்துகள்‌ மெய்‌எழுத்தோடு சேர்ந்து பிறக்கும்போது உருவாகும்‌ உயிர்மெய்‌ எழுத்துகள்‌, உயிர்‌ எழுத்தின்‌ இயல்பையே கொண்டு ஒலிக்கும்‌.

'க்‌! என்னும்‌ மெய்‌ எழுத்தோடு 'அ, 'இ', 'உ', 'எ, 'ஒ' ஆகிய குறில்‌ எழுத்துகள்‌ சேரும்போது, உயிர்மெய்க்‌ குறில்‌ எழுத்துகள்‌ தோன்றும்‌.

அதே மெய்யோடு 'ஆ', 'ஈ, 'ஊ', 'ஏ', ஐ', 'ஓ', 'ஔ' ஆகிய நெடில்‌ எழுத்துகள்‌ சேரும்போது உயிர்மெய்‌ நெடில்‌ எழுத்துகள்‌ தோன்றும்‌.

மெய்‌ எழுத்துகளில்‌ குறிலும்‌, நெடிலும்‌ இல்லை. எனவே, உயிர்‌ எழுத்துகளுடன்‌ சேரும்போது அவற்றின்‌ பண்பினையே உயிர்மெய்‌ எழுத்துகள்‌ பெறுகின்றன.

 உயிர்‌ எழுத்துகளை ஒலிக்கும்‌ முறை

முதலில்‌ உயிர்‌ எழுத்துகள்‌ எவ்வாறு ஒலிக்க வேண்டும்‌ என்பதை அறிந்துகொள்வோம்‌. உயிர்‌ எழுத்துகள்‌ அனைத்தும்‌ காற்றின்‌ தடை இல்லாமல்‌ இயல்பாகவே பிறக்கின்றன.அ, ஆ - இவ்விரண்டு உயிர்களும்‌ வாயைத்‌ திறந்து ஒலிப்பதனால்‌ பிறக்கின்றன.


6, ஈ, ௪. ஏ, ஐ - ஐந்து எழுத்துகளும்‌ வாயைத்‌ திறப்பதோடு மேல்வாய்ப்‌ பல்லை, நா விளிம்பு தொடுவதால்‌ பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓஒ, ஒள - ஐந்து எழுத்துகளும்‌ உதடுகளைக்‌ குவித்து ஒலிப்பதனால்‌ பிறக்கின்றன.

 மெய்‌ எழுத்துகளை ஒலிக்கும்‌ முறை

உடல்‌ இல்லாமல்‌ உயிர்‌ இயங்காது. அதுபோல, மெய்‌ இல்லாமல்‌ மொழியும்‌ இயங்காது. உயிர்‌ ஒலிகள்‌ காற்றின்‌ தடை இல்லாமல்‌ வாயைத்‌ திறந்தவுடன்‌ பிறக்கும்‌. ஆனால்‌, மெய்யொலிகள்‌ காற்றினை நாக்கு, உதடு, பல்‌ ஆகியவை தடை டசய்வதால்‌ பிறக்கும்‌. இவ்வாறு தடை டசய்யும்போது நாக்கு, பல்‌, உதடு ஆகியவற்றைத்‌ தடவியும்‌ வருடியும்‌ மெய்‌ எழுத்துகள்‌ பிறக்கின்றன. மெய்யொலிகளை ஒலிக்கும்‌ இடம்‌, தன்மை ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ மூவகையாகப்‌ பிரிக்கலாம்‌. அவை,


1. வல்லினம்‌
2. மெல்லினம்‌
3. இடையினம்‌

வல்லினம்‌

காற்று வெடித்து வெளிவருவதால்‌ பிறக்கும்‌ ஒலிகள்‌ வல்லொலிகள்‌. இதனை வெடிப்பொலிகள்‌ என்றும்‌ கூறுவர்‌. ஆகியவை வல்லின எழுத்துகள்‌ ஆகும்‌. இவற்றை ஒலிக்கும்போது, காற்று வேகமாக வெளிவிடப்படல்‌ வேண்டும்‌.

 மெல்லினம்‌

மெல்லின எழுத்துகள்‌ காற்று தடைபடாமல்‌ மூக்கின்‌ வழியாக வருவதால்‌ தோன்றுகின்றன.
காற்றை வாயில்‌ தடுத்து மூக்கின்‌ வழியாக வெளிவிடுவதால்‌ இவ்வொலிகள்‌ மென்மைத்‌ தன்மை
பெறுகின்றன இதன்‌ காரணமாக மெல்லினம்‌ என்ற பெயரைப்‌ பெற்றுள்ளன. ங்‌. ஞ்‌. ண்‌,ந்‌,ம்‌,ன்‌
ஆகியவை மெல்லின எழுத்துகளாகும்‌.

 இடையினம்‌

வன்மையாகவும்‌ இல்லாமல்‌ மென்மையாகவும்‌ இல்லாமல்‌ இரண்டிற்கும்‌ இடைப்பட்ட
தன்மையுடைய ஒலியாக ஒலிக்கப்படும்‌ எழுத்துகளை இடையின எழுத்துகள்‌ என்று கூறுகிறோம்‌.
இவற்றை ஒலிக்கும்போது கீழ்‌ உதடுகள்‌ மிகவும்‌ மெல்லியதாகத்‌ தடித்து நிற்கும்‌.
ய்‌, ர்‌, ல்‌, வ்‌, ழ்‌, ள்‌ ஆகியவை இடையின எழுத்துகள்‌ ஆகும்‌.
மெய்யெழுத்துகள்‌ ஒலிப்பு முறைகள்‌
க்ங்‌ - இவ்விரு மெய்களும்‌ நாவினது முதற்பகுதி அண்ணத்தைத்‌ தொடுவதனால்‌
தோன்றுகின்றன.
ச்‌ஞ்‌ - இவ்விரு மெய்களும்‌ இடை நா ௬டு நாக்கு) நடு அண்ணத்தைத்‌ தொடுவதனால்‌
பிறக்கின்றன.
ட்,ண்‌- இவை, நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத்‌ தொடுவதனால்‌
பிறக்கின்றன.
5th - மேல்வாய்ப்‌ பல்லினது அடியை, நாக்கின்‌ நுணி பொருந்துவதனால்‌
இவ்வெழுத்துகள்‌ தோன்றுகின்றன.
ப்‌ ம்‌ - மேல்‌ உதடும்‌ கீழ்‌ உதடும்‌ பொருந்த, இவ்வெழுத்துகள்‌ பிறக்கும்‌.
ய்‌ _ இது, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின்‌ அடிப்பகுதியைப்‌ பொருந்துவதனால்‌
பிறக்கின்றது.
Lip - இவை, மேல்வாயை நாக்கின்‌ நுணி தடவுவதனால்‌ பிறக்கின்றன.
o - இது, மேல்வாய்ப்‌ பல்லின்‌ அடியை, நாவினது ஓரங்கள்‌ தடித்து நெருங்குவதனால்‌ பிறக்கிறது.
ள்‌ _ இது, மேல்வாயை, நாவினது ஓரங்கள்‌ தடித்துத்‌ தடவுவதனால்‌ பிறக்கிறது.
வ்‌ - இது, மேல்வாய்‌ பல்லைக்‌ கீழுதடு பொருந்துவதனால்‌ பிறக்கின்றது.
ற்,ன்‌ - இவை, மேல்வாயை நாக்கின்‌ நுணி மிகவும்‌ பொருந்துவதனால்‌ பிறக்கின்றன. இவ்வாறு ஒவ்வோர்‌ எழுத்தும்‌ ஒவ்வொரு முறையில்‌ பிறக்கின்றது. ஆகவே, எழுத்துகளின்‌ ஒலிப்புமுறைகளை அறிந்து, அவற்றைச்‌ சரியாக ஒலிக்க வேண்டும்‌.
 ஒலிமாற்றம்‌
தமிழ்‌ எழுத்துகளைத்‌ தனித்தனியாக ஒலிக்கும்போது, மேற்குறிப்பிட்ட வழியில்‌ அமையும்‌.
ஆனால்‌, இவ்வெழுத்துகள்‌ சொற்களில்‌ பயின்று வரும்போது உடன்வரும்‌ எழுத்தின்‌ ஒலியோடு சார்ந்து, சிறிது ஒலி மாற்றம்‌ அடையும்‌. உதாரணமாக 'க! என்பது வெடிப்பொலி. இது தனக்கு இனமான மெல்லொலியோடு சேர்ந்து வரும்போது சிறிது மெல்லொலித்‌ தன்மை பெற்று வரும்‌.
'கு' என்னும்‌ எழுத்தைத்‌ தனித்துச்‌ சொல்லும்போது, ய என ஒலிக்கும்‌. ஆனால்‌,
இவ்வெழுத்து, 'பங்‌£கு' என்னும்‌ சொல்லில்‌ ங்‌ என்னும்‌ மெல்லொலியுடன்‌ சேரும்போது, 'ஏப' என
ஒலிக்கும்‌.
இவ்வாறே, அகம்‌ என்ற சொல்லில்‌ 'க! எனும்‌ எழுத்து 1 என ஒலிக்காமல்‌ ௩8 என
ஒலிக்கும்‌.
பஞ்சு எனும்‌ சொல்லில்‌ 'சு' எனும்‌ எழுத்து 5 என ஒலிக்காமல்‌ ப என ஒலிக்கும்‌.
1.5 உருவ வேறுபாடு
எழுத்துகள்‌ சொற்களாக மாறும்போது சிறிது ஒலி மாற்றம்‌ பெறும்‌ எனப்‌ பார்த்தோம்‌.
ஏனெனில்‌, தமிழில்‌ அழுத்தி ஒலிக்கக்கூடிய எழுத்துகள்‌ என்று எவையும்‌ இல்லை. அவை,
தமக்கு அருகிலுள்ள எழுத்துகளின்‌ ஒலிக்கேற்ப சிறிது மாற்றம்‌ பெறுகின்றன.
பிறமொழிச்‌ சொற்களைத்‌ தமிழில்‌ பயன்படுத்தும்‌ போது அவற்றின்‌ ஒலிகளை ஈடுசெய்ய
தனி எழுத்துகள்‌ பயன்படுத்தப்படுகின்றன.
QI, 22, ஹ, ஸ என்பன சமஸ்கிருத எழுத்துகள்‌ ஆகும்‌.
பெரும்பாலும்‌ சமஸ்கிருதச்‌ சொற்களை எழுதும்போதே இவ்வெழுத்துகள்‌ பயன்படுகின்றன.
தற்போது பல்வேறு ஆங்கிலமொழிச்‌ சொற்களை எழுதுவதற்கும்‌ இவ்வெழுத்துகள்‌ மிகவும்‌
பயனுள்ளதாக இருக்கின்றன. பிறமொழிச்‌ சொற்களை எழுதும்போது எந்த ஒலி மாற்றமும்‌ வராமல்‌
இருக்க, இந்த எழுத்துகள்‌ துணை செய்கின்றன.



கருத்துகள் (Comments)

நீங்கள் விரும்பக்கூடியவை (You May Also Like)